தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்படும் நயன்தாரா சமீபத்தில் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். தன்னை நயன்தாரா என்று அழைப்பதே மகிழ்ச்சி எனவும் கூறி இருந்தார். இன்று சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா ஐயா திரைப்படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஹரி இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஐயா. அந்தத் திரைப்படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு ஜோடி ஆனார். முதல் படத்தில் சுப்ரீம் ஸ்டார் இரண்டாவது படத்தில் சூப்பர் ஸ்டார் என ஜோடியான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆவார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பாலிவுட்டுக்கும் சென்று விட்டார். அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற இந்தி படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த அசத்தினார். இதனைத் தொடர்ந்து சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது கிடைத்திருந்தது.

இந்த நிலையில் நயன்தாரா பற்றி பேட்டி ஒன்றில் சரத்குமார் கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், ஐயா படத்தில் பார்த்த நயன்தாரா இது, லேடி சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் போட்டு வராங்கனா பெருமையா இருக்கு. நம்முடன் பயணித்தவர் வெற்றியடைந்து விட்டார் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. நயன்தாரா ஐயா படத்திற்கு முதல் நாள் ஷூட்டிங் வந்ததை என்னால் மறக்கவே முடியாது.

சிவந்திபுரத்தில் படபிடிப்பு நடந்தது. அங்க தான் அவங்க முதல் நாள் வராங்க. அந்தப் படத்தில் அவங்க கிராமியப் பெண். காரில் வந்து இறங்கியதும் மாடன் டிரஸ்ஸில் வந்து இறங்கினாங்க. அதனைப் பார்த்து டென்ஷனான ஹரி, யோவ் கூட்டிட்டு போயா என்று துரத்தினார். இவங்க தான் இந்த படத்துக்கு ஹீரோயினியா, செட்டே ஆகாது. ரூமுக்கு கூட்டிட்டு போங்க காஸ்டியூம் கொடுத்து சாயங்காலம் பார்க்கலாம் என்று சொன்னாரு. அவர் கடினமாக உழைத்த இன்று முன்னேறியுள்ளார் என்று நயன்தாரா பற்றிய சரத்குமார் பேசியுள்ளார்.
