Categories: சினிமா

குடும்பத்துடன் தனது சொந்த ஊரில் நடைபெற்ற அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார்… வைரலாகும் போட்டோஸ்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் வெளிவந்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம், சேரன் பாண்டியன், சூர்யவம்சம், சமுத்திரம் என நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜயின் தந்தையாக நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் ,பிரம்மாண்டமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் பெரிய பழுவேட்டாரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இருவரும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். இவர்களில் வரலக்ஷ்மி சரத்குமார் தற்பொழுது முன்னணி நடிகைகளில் ஒருவராக திரையுலகில் வலம்  கொண்டுள்ளார்.

நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை 2001ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 80 களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா.

ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, சித்தி, அரசி, வாணி ராணி ,செல்லமே என பல ஹிட் சீரியல்களை தயாரித்தும் வருகிறார்.

இவர்களுக்கு ராகுல் சரத்குமார் என்ற மகனும் உள்ளார். ரேயான் மிதுன் என்ற மகள் நடிகை ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்தவர்.

தற்பொழுது திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் இவர்கள் பிசியாக பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

இந்நிலையில்  நடிகர் சரத்குமார். தனது மனைவி ராதிகா சரத்குமார், மகள் வரலக்ஷ்மி, மகன் என மொத்த குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் பிரதிஷ்டை மற்றும் சிராவயல் கிராமத்தில் உள்ள  குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த விழா தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர, ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…

 

Begam

Recent Posts

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

10 seconds ago

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

12 minutes ago

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

22 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

32 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

37 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

47 minutes ago