Categories: சினிமா

“காமெடியன் டூ ஹீரோ” நடிகர் சந்தானத்தின் மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு..!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் தான் நடிகர் சந்தானம். தற்போது இவர் வளரும் ஹீரோவாக இருக்கிறார். அதுவும் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியில் ஒன்றுதான் லொள்ளு சபா. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்று கூறலாம். அடுத்த வாரம் ரிலீஸ் ஆகக்கூடிய படங்கள் அனைத்தையும் காமெடியாக சித்தரித்து தொகுத்து வழங்குவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் நடித்த நடிகர்கள் தான் இன்றைய சினிமாவில் பல முக்கிய அந்தஸ்தை பெற்ற நடிகர்களாக உள்ளனர். அவர்களில் சந்தானம், யோகி பாபு மற்றும் சுவாமிநாதன் ஆகிய நடிகர்களும் அடங்குவார்கள்.  தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இப்படி காமெடியனாக டாப் கியரில் சென்று கொண்டிருந்த இவருக்கு திடீரென்று ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்தது.

அதனால் அறை எண் 305-ல் கடவுள் ,கண்ணா லட்டு தின்ன ஆசையா, இனிமே இப்படித்தான் என்ற நகைச்சுவை படங்களை ஹீரோவாக நடித்தார். அவருடைய இந்த முடிவு கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஹீரோவாக அவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பு பெற்றது. இவர் காமெடி படங்களின் நடிப்பதை நிறுத்திய பிறகு தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டது என்றே சொல்லலாம். சமீபத்தில் ரிலீசான மதகஜராஜா படம் மூலமாக அது அப்பட்டமாக தெரிந்தது.

சந்தானம் என்ற காமெடி நடிகர் கோலிவுட் எவ்வளவு மிஸ் பண்ணியது என்பதை உணர்த்தியது. தற்போது டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தை ஆர்யா தயாரித்துள்ளார். சந்தானம் இன்று தன்னுடைய 45வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சந்தானம் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்த 15 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு 80 முதல் 90 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இவருக்கு சென்னையில் சொந்தமாக சொகுசு பங்களா உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு ஆடம்பர காரும்  சொந்தமாக வைத்துள்ளார்.

Soundarya

Recent Posts

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

1 minute ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

8 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

13 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

18 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

31 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

36 minutes ago