Categories: சினிமா

துப்பறியும் வேலையை தொடங்கிய முத்து- மீனா… சிக்கிகொண்ட வித்யா… சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் பணத்தை ஏமாற்றிவிட்டு சென்றவனின் போட்டோவை கண்டுபிடிக்க சிசிடிவி ஃபுட்டேஜ் வாங்க ரோகினியும் மனோஜ்ஜூம் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு மனோஜ் அதிக பிரசங்கிதனமாக பேசவே போலீஸிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டார். இதை மீனாவின் அம்மாவும் தங்கையும் தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி சிசிடிவி ஃபோட்டோஸ் வாங்கிவிட்டு வீட்டிற்கு வருகின்றனர். வந்ததும் மலேசியாவிற்கு வந்த தம்பதியை நான் ஃபிலைட் ஏற்றி விட்டு விட்டேன் என்று மனோஜிடம் எதார்த்தமாக முத்து பேசிக்கொண்டு அந்த மலேசியாவில் இருந்து வந்தவர்களுக்கு ஜெயில்ல யாரோ தெரியுமா உன் மாமனார் கண்டுபிடிக்க சொல்லுவோமா என்று கேட்டதுக்கு ரோகினி கோவப்பட்டு வந்து விடுகிறார். என் அப்பா பத்தி யாரும் பேச தேவையில்லை அப்படின்னு சொல்லிவிட்டு செல்கிறார்.

அடுத்ததாக இதனால் முத்துவுக்கும் மீனாவுக்கும் ரோகினி மேலான சந்தேகம் அதிகமாகிவிட்டது. மீனா கூட முத்துவிடம் எங்க ஜெயில்ல யாராவது இருக்காங்களா உதவி செய்றாங்கன்னா எல்லாரும் ஐயோ நமக்கு உதவி கிடைக்குது அப்படின்னு நன்றி தாங்க சொல்லுவாங்க இவங்க ஏன் பதட்டப்படறாங்க எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு அவங்க அப்பா மலேசியாவில் இல்லை என்று நினைக்கிறேன் என்கிறார். உடனே முத்து உனக்கு இப்பதான் சந்தேகம் வந்ததா எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகமாய் இருக்கு நாம இத கண்டுபிடிச்சு வெளிய கொண்டே வந்து ஆகணும் என்று முத்துவும் மீனாவும் முடிவு செய்து துப்பறியும் வேலையை ஆரம்பிக்கின்றனர்.

முதலாவதாக இருவரும் பார்வதி வீட்டிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று பார்வதி வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சென்று பார்வதியிடம் உங்களுக்கு ரோகினியை எப்படி தெரியும் எப்படி உங்களுக்கு பழக்கம் ஆச்சு என்று கேட்கின்றனர். அப்போது பார்வதி எனக்கு ரோகினி பெருசா ஒன்னும் பழக்கமில்ல அவ பார்லர் வச்சிருந்ததால எனக்கு அடிக்கடி தலையில மசாஜ் பண்ணி விடுவதற்கு வருவா அவ்ளோதான் பழக்கம் அப்போதான் நான் விஜயாவுக்கு அவளை அறிமுகப்படுத்தி வச்சேன். அதுக்கு அப்புறம் தான் அவங்க அப்பா மலேசியாவுல இருக்காங்கன்னு எனக்கு தெரியும் என்று கூறுகிறார். உடனே இவர்களுக்கு இவ்வளவு தான் தெரியும் போல என்று கூறிவிட்டு வெளியே வந்துட்டு மீனா நீ போய் வித்யா கிட்ட போய் நைசா விசாரிச்சு பாரு என்று மீனாவை அனுப்பி வைக்கிறார் முத்து.

அங்கு போய் வித்யாவிடம் மீனா கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் வித்யா மாற்றி மாற்றி பதில் கூறுகிறார். முதலில் பேசும்போது ஏழு எட்டு வயசுல இருந்து ரோகினி தெரியும் என்று கூறிய வித்யா இப்போது மீனா கேட்கும் போது வாய் தவறி காலேஜ் படிக்கும் போது இருந்து தான் எனக்கு ரோகிணி பழக்கம் என்று எல்லா செய்திகளையும் மாத்தி மாத்தி கூறுகிறார். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் மீனாவை அனுப்பனும் அப்படின்னு வித்யா மீனாவை கிளம்ப வைத்து விடுகிறார். அடுத்து மீனா முத்துவின் கார் செட்டுக்கு போயி வித்யா மாத்தி மாத்தி பதில் சொன்னதையும் தப்பு தப்பா சொன்ன விஷயத்தையும் முத்துவிடம் கூறுகிறார்.

அப்போ வர வர நமக்கு ஒவ்வொரு ஸ்டெப் எடுக்கும்போது நமக்கு கன்ஃபார்ம் ஆகுது என்று சொல்லிக்கொண்டு அடுத்ததாக மீனா நான் பூவ போய் கொடுத்துட்டு வரேன் அப்படின்னு பூ கொடுப்பதற்கு செல்கிறாள். அப்போது அவருக்கு தொழில் போட்டியாக இருக்கும் பெண்மணி அவருடைய ஆட்கள் மீனாவின் பூ வைத்திருக்கும் பாக்ஸை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். நேரா அந்த பெண்மணி வீட்டில் கொண்டு வைத்துவிடுகிறார்கள். நாம் சேர்ந்து தொழில் பண்ணலாம் என்று கேட்கும் போது எனக்கு யாரோட தயவும் தேவையில்லை நான் தனியாவே சாதிப்பேன் என்று சண்டை போட்டுவிட்டு வந்து விடுகிறார்.

அதற்கு அடுத்ததாக வித்யா ரோகினிக்கு போன் செய்து மீனா வந்ததும் துருவி துருவி கேட்டதையும் சொல்லிவிடுகிறார். ரோகினி நேராக மனோஜிடம் போய் எதுக்கு இவங்க தேவையில்லாத வேலை பாக்குறாங்க என்று திட்டுகிறார். மனோஜ் அவர்களுக்கு பணம் வரணும் அதுக்காக தான் அப்படி பண்றாங்க நம்ம பணம் ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டா அவங்க அமைதியாயிருவாங்க. நீ உங்க அப்பா வித்யாவோட அப்பா எல்லாம் பிரண்ட்ஸ் தான சொன்ன ஏதாவது பணம் ஏற்பாடு பண்ணி கொடு என்று அவர் ஒரு புதிய பிரச்சினையை ரோகினிக்கு கிளப்புகிறார்.

இதற்கிடையில் வீட்டிற்கு முத்து ஒரு புதிய பிளான் உடன் வந்திருக்கிறார். கையில் Form எடுத்துட்டு வந்து வீட்டில் உள்ள அனைவரையும் நீங்க கையெழுத்து போடுங்க எல்லாருக்கும் பாஸ்போர்ட் அப்ளை பண்ண போறேன் நம்ம எல்லாரும் மலேசியாவுக்கு போயிட்டு வந்துரலாம் என்று கூறுகிறார். எதுக்கு மலேசியாவுக்கு போகணும் என்று விஜயாவும் அண்ணாமலையும் கேட்கின்றனர். மேலும் அங்கு போன செலவு நிறைய ஆகுமே என்று கேட்கிறார்கள்.

உடனே முத்து அதுக்கு தான் நமக்கு செலவு பண்ணதுக்கு ஆள் இருக்கே நம்ம பார்லர் அம்மா வீடு இருக்கும் கார் இருக்கு எல்லாமே தான் இருக்குமே பணக்காரங்க கேஸ் வாங்கிட்டு ஜெயிலுக்கு போறது சகஜம்தான் நானே ரெண்டு கார் வச்சிருக்கேன் அவங்க பெரிய கோடிஸ்வரன் அவர்கள் போனா நம்மள அவங்க கவனிக்க மாட்டாங்களா நமக்காக செலவு பண்ண மாட்டாங்களா அப்படின்னு போட்டு வாங்குவதற்கு முத்து முயற்சி செய்கிறார். ரோகினி ஒரு பக்கம் பதட்டமாகி கொண்டு இருக்கிறார். விஜயாவும் ஆமா இது நல்ல ஐடியாவா இருக்கு நம்ம போயிட்டு வந்துடலாம் என்று சொல்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

2 மணத்தியாலங்கள் ago