சாண்டி மாஸ்டர் ஒரு நடன கலைஞராக இருந்தாலும், இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலமாகத்தான் மிகவும் பிரபலமானார். தனது நடன திறமையாலும் நன்றாக பாடும் திறமையாலும் தன் காமெடியாலும் மக்களை கவர்ந்திழுத்தார். தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் கலகலப்புடன் வைத்திருப்பது சாண்டியின் குணாதிசயம்.

டிவி ஷோக்களிலும் சினிமாவிலும் நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி மாஸ்டர். சந்தோஷ் குமார் எனும் இயற்பெயரை சாண்டி என மாற்றிக் கொண்டார். இவர் தன்னுடன் இணைந்து பணியாற்றிய நடன இயக்குனர் சில்வியாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

நடன இயக்குனர் சாண்டி ரஜினிகாந்த், கமல், விஜய், சிம்பு, தனுஷ் என பல நட்சத்திரங்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். நடன இயக்குனராக மட்டுமல்லாமல் இவர் 3:33 எனும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். சாண்டி மற்றும் சில்வியா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் Suzzannah Michelle . இவர் தற்பொழுது பெரிய பெண்ணாக வளர்த்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் சாண்டியின் மனைவி சில்வியா. இவர் தற்பொழுது தனது மகள் செய்யும் சேட்டையை வீடியோவாக இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை ரசிகர்கள் செம கியூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…
View this post on Instagram
