சினிமா வாழ்க்கையில இப்படி ஒரு டைரக்டரை பார்த்ததே இல்லை.. இயக்குனரை புகழ்ந்த நடிகர் சம்பத்ராஜ்..!

By Nanthini on அக்டோபர் 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் தான் சம்பத்ராஜ். ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னட திரைப்படங்களில் அதிக அளவு நடித்து வருகின்றார். இவர் முதல் முதலில் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான நெறஞ்ச மனசு என்ற திரைப்படத்தில் சிவனாண்டி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

   

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. அதனை தொடர்ந்து காமராஜ், திருப்பதி, பருத்திவீரன், தாமிரபரணி, சரோஜா, சேவல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பிஸியா நடிகராக வலம் வந்தார்.குறிப்பாக இவர் நடித்த ஆரண்ய காண்டம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது.

   

 

இந்த நிலையில் இவர் சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் ஆரண்ய காண்டம் திரைப்படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ஆரண்ய காண்டம் திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியானாலும் அப்போது எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் இப்போ அந்த படத்தை பற்றி அதிகமாக பேசுறாங்க. அறிமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அந்த படத்தை இயக்கி இருந்தார். அவருடைய முதல் படமே இதுதான்.

நான் இதுவரைக்கும் எத்தனை டைரக்டர் கிட்ட கதை கேட்டு நடிச்சிருக்கேன் ஆனா அவரை மாதிரி ஒரு டைரக்டரை இதுவரைக்கும் நான் பார்த்ததே கிடையாது. அந்த அளவுக்கு அற்புதமா கதைய சொன்னாரு. அங்கு சின்ன பையன் கதாபாத்திரத்தில் இருந்து எல்லா கதாபாத்திரத்தையும் என்கிட்ட அவர் நடித்துக் காட்டினார். அவர் மாதிரி ஒரு இயக்குனரை எங்கேயுமே பார்க்க முடியாது. அவருக்காகவே இந்த படத்தை பண்ணனும்னு எனக்கு தோணுச்சு. படம் நடிக்கிறதுக்கு முன்னாடியே நான் சினிமாவை அப்படியே பாத்துட்டேன் என்று இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பற்றி சம்பத்ராஜ் பெருமையாக பேசியுள்ளார்.