தமிழ் சினிமாவில் யாராலும் எளிதில் மறக்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்தான் பி வாசு. இவர் இயக்கிய சின்னத்தம்பி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ரஜினி நடித்த மன்னன் மற்றும் சந்திரமுகி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தன. அஜித்தை வைத்து வரு இயக்கிய பரமசிவன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அவருடைய மகன் சக்தியை நடிகராக அறிமுகமாக்கினார். அவருக்கும் வந்த வேகத்தில் சினிமாவில் சில வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி நினைத்தாலே இனிக்கும், தொட்டால் பூ மலரும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரசிகர்கள் மத்தியில் இவர் வில்லனாக தோன்ற ஆரம்பித்தார். அடுத்து மது அருந்திவிட்டு காரை விபத்துக்குள்ளாக்கினார் என்ற புகாரில் சிக்கினார். இதனை தொடர்ந்து சில ஆண்டுகள் அப்படியே முடங்கிப் போனார். இவருக்கு என்ன ஆனது சொந்த வாழ்க்கையில் சந்தித்த துயரம் என்ன என்பது குறித்து எதுவும் யாருக்கும் தெரியவில்லை. தற்போது நெருக்கடியில் இருந்து மீண்டு வந்துள்ள சக்தி பல வருடங்களுக்குப் பிறகு ஒரு youtube தளத்தில் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், சிறுவயதில் இருந்து நான் தோல்வியை பார்த்தது கிடையாது.
கொஞ்சம் வசதியான வீட்டு பையனாக வளர்ந்து விட்டேன். எந்த பாடத்திலும் நான் பெயில் ஆனது கிடையாது. நன்றாக எம் பி ஏ வரை படித்தேன். ஆனால் அதற்கு நேர் எதிராக இருந்தது என்னுடைய சினிமா வாழ்க்கை. சினிமாவை தொழிலாக எடுத்த பிறகு பல தோல்விகளை சந்தித்தேன். எனது 30 ஆண்டுகால சந்தோஷமான வாழ்க்கை இந்த எட்டு வருடங்கள் அப்படியே புரட்டி போட்டு விட்டன. நான் ஒரு கெட்டவனாக பல இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளேன். மேலும் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் பற்றி பேசிய சக்தி வாசு, படம் பார்த்து அழுதுவிட்டேன். ஏனென்றால் அந்த திரைப்படம் என்னுடைய நிஜ வாழ்க்கையைப் பற்றி அப்படியே கூறியிருந்தது. அந்தப் படத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கும்.
அதில் மகன் இந்த முகத்தை நீங்க திரும்ப பார்ப்பீங்க, பாக்க மாட்டேன்னு தானே சொன்னீங்க திரும்ப இந்த முகத்தை நீங்க பார்ப்பீங்க என கூறுவது எனக்கு அழுகையை ஏற்படுத்தியது. ஆனா நான் இந்த டயலாக்கை ஏன் அப்பா கிட்ட சொல்லல இருந்தாலும் அது என்ன ரொம்ப டச் பண்ணுச்சு. அதனைப் போலவே மகனிடம் அப்பா, ஆக்சிடென்ட் ஆகும்போது கூட நீ தோற்கவில்லை, எப்போது உன் முகத்தை நீ கண்ணாடியில் பார்க்க மறந்தாயோ அப்போதே தோற்று விட்டாய் என கூறியிருப்பார். இந்த டயலாக்கை என்னுடைய அப்பா அப்பவே என்கிட்ட கூறினார். இந்த இடத்தில் தியேட்டரில் நான் தேம்பி தேம்பி அழுதுவிட்டேன். என் அப்பா அப்போ சொன்ன பிறகு நான் கண்ணாடியை பார்க்க ஆரம்பித்தேன் என சக்தி வாசு உருக்கமாக பேசியுள்ளார்.