தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் முதலில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக நடிகை சாய்பல்லவி நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அமரன் படம் சாய்பல்லவிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் என்ற படத்தை இயக்க இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டபோது அந்த படத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. அப்போது நடிகை சாய் பல்லவி ஆடிசனுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அப்போது அவரது முகத்தில் நிறைய பருக்கள் இருந்ததால் அவரை வேண்டாம் என்று மணிரத்னம் நிராகரித்து விட்டார். ஆனால் இப்போது இந்த படத்தில் சாய் பல்லவி தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று மணிரத்னம் கமிட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
