நடிக்க வருவதற்கு முன்பு ராணுவத்திலிருந்து ஆர்.எஸ் மனோகரை காதலித்த பிரான்ஸ் அழகி.. இணைசேரா காதலர்களின் சுவாரசிய கதை..!

By Nanthini on பங்குனி 6, 2025

Spread the love

பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்தாலும் அந்த வில்லன் கதாபாத்திரத்தையே ஹீரோவாக்கி பல நாடகங்களில் நடித்தவர்தான் ஆர் எஸ் மனோகர். சினிமாவில் சேர்வதற்கு முன்பு மனோகர் ராணுவத்தில் இருந்தார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. ராணுவத்தில் இருந்தபோது சுபாஷ் சந்திர போஸின் படைவீரர்கள் பல பேரை சந்திக்கும் வாய்ப்பு ஆர் எஸ் மனோபருக்கு கிடைத்தது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் ராணுவத்தில் பஞ்சாப்பை சேர்ந்த வீரர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.

வாழ்க்கையில் ஒன்று சேராவிட்டாலும் மறக்க முடியாத காதல் அது... ஆர்.எஸ்.மனோகர்

   

அவர்களுடைய கட்டுமஸ்தான் உடலை பார்த்துவிட்டு தானும் அது போல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆர்எஸ் மனோகர் தினமும் தவறாமல் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வாராம். அப்போது உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மனோகரை பார்த்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு மனோகர் மீது காதல் மலர்ந்து உள்ளது. அந்த காதலை ஒரு கட்டத்தில் மனோகரும் உணர்ந்தார். அது கை கூடாத காதல் என்றாலும் அது குறித்து மனோகர் ஒரு கட்டுரையில் எழுதி இருந்தார். அல்டிமாவை பொறுத்தவரை மிகப் பெரிய அழகி.

   

நாடகக் காவலர்' ஆர்.எஸ்.மனோகரை நினைவிருக்கிறதா?

 

என்ன காரணத்தினாலோ அவருக்கு என் மீது காதல் வந்தது. பல மணி நேரங்கள் நேரம் போவதே தெரியாமல் அல்டிமா என்னிடம் பேசிக் கொண்டிருப்பார். நானும் அவரிடம் நாள் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பேன். நான் ராணுவத்திலிருந்து வந்த பிறகும் அவர் எனக்கு தொடர்ந்து கடிதங்கள் போட்டுக் கொண்டிருந்தார். நானும் பதிலுக்கு அவருக்கு கடிதங்கள் மற்றும் வாழ்த்துக்களை அனுப்புவேன். நாங்கள் வாழ்க்கையில் ஒன்றாக இணையா விட்டாலும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பெண் அல்டிமா என்று ஆர் எஸ் மனோகர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.