காதல் கணவர் மோதிரம் மாற்றியதில் வெக்கப்பட்ட ரோபோ ஷங்கரின் மகள்… வெளியான கியூட் நிச்சயதார்த்த வீடியோ…

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அப்படியே பிரதிபலித்து மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பிரபலமானார். அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற ரோபோ ஷங்கர் வெள்ளித்திரையில் ‘தீபாவளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

   

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் பின்னர் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கினார். இவரது மகளான இந்திரஜா ஷங்கர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து விருமன் படத்திலும் நடித்திருந்தார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தற்பொழுது பிசியாக கமிட்டாகி நடித்து வருகிறார். நடிகை இந்திரஜா கார்த்திக் என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். கார்த்திக் மதுரையை சேர்ந்தவர்.  ‘தொடர்வோம்’ என்ற பெயரில் தன்னார்வல அறக்கட்டளையின் மூலம் சில குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

ரோபோ ஷங்கரின் பூர்வீகமும் மதுரை என்பதால் இவர்கள் இருவரும் ஒரே ஊரை சேர்ந்ததால் உறவினர்களாக இருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் நேற்று நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by @clicks_by_vishnu_kumar_

author avatar