Connect with us

கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ ஷங்கர் மகள் இந்திராஜாவின் நிச்சயதார்த்தம்… முக்கிய பிரபலத்தை சிறப்பு விருந்தினராக அழைத்த ரோபோ ஷங்கர்…

CINEMA

கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ ஷங்கர் மகள் இந்திராஜாவின் நிச்சயதார்த்தம்… முக்கிய பிரபலத்தை சிறப்பு விருந்தினராக அழைத்த ரோபோ ஷங்கர்…

 

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது திரையுலகில் நடிகையாக கால் பதித்து கலக்கி வருகிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

   

இத்திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடிகை இந்திரஜா நடித்து கலக்கினார். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை இந்திரஜா டாக்டர் கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். இருவருக்கும் திருமணம் என கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் திருமண அழைப்பிதழ்களும்  முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் போன்றோருக்கு கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இன்று நடிகை இந்திரஜாவிற்கு முறை மாமன் கார்த்திக்கிற்கும்  நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால் , அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். தற்பொழுது நடிகை இந்திராஜாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top