ஒரு நாளைக்கு 10 சிகரட் வரைக்கும்.. தொண்டைல ஆப்ரேஷன் பண்ணி ஆறுமாசம் பேச முடியாம.. RJ பாலாஜி சொன்ன பகீர் தகவல்..

By Sumathi

Updated on:

நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில், சமீபத்தில் வெளியானபடம் சிங்கப்பூர் சலூன். இந்த படம் குறித்த பிரமோ நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஆர்ஜே பாலாஜி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, சின்ன வயதில் ஸ்கூலில் படிக்கும்போதே, காலேஜ் பிரண்ட்ஸ் உடன்தான் நான் இருப்பேன். அவர்கள் சிகரட் பிடித்ததால் நானும் அவர்களுடன் சேர்ந்து சிகரட் பிடிப்பேன்.

RJ Balaji

   

நான் ஸ்கூல் பையன் என்று தெரிந்துவிடக் கூடாது என்பதால், அவர்களுடன் சேர்ந்து சிகரட் பிடிப்பேன். ஆனால் எனக்கு புகையை தம் கட்டி உள்ளே இழுக்க தெரியாது. ஒருமுறை எங்க ஏரியா பையன், புகையை எப்படி தம் கட்டி உள்ளே இழுப்பது என்று சொல்லிக்கொடுத்தான். அதன்பிறகுதான் சிகரட் புகை தந்த போதை எனக்கு தெரிந்தது. அது எனக்கு பிடித்து விட்டது.

RJ Balaji

பிறகு நிறைய சிகரட் பிடிக்க ஆரம்பித்தேன். நிறைய பாக்கெட் தினமும் பிடிக்க மாட்டேன். ஆனால் ஒரு பாக்கெட் அளவுக்கு 10 சிகரட் பிடித்து விடுவேன். இப்படி நான்கைந்து ஆண்டுகள் தொடர்ந்து சிகரட் பிடித்ததால், தொண்டையில் செருமல் அதிகமானது. ஒரு கட்டத்தில் சிரமமாகி போனது.

டாக்டரிடம் சென்ற போது தொண்டைக்குழாயில் ஏதோ பிரச்னை என்று டாக்டர் கூறி, 2 வாரம் பேசாமல் இருக்கச் சொன்னார். நானும் பேசாமல் இருந்தேன், பிறகு போன போதும், தொண்டையில் அதே பிரச்னை இருக்கிறது என கூறி மீண்டும் 2 வாரம் பேசாமல் இருக்கச் சொன்னார். இப்படியே 3 மாதம் போய் விட்டது.

RJ Balaji

பிறகு ஆபரேசன் செய்தால்தான் குணப்படுத்த முடியும் என்றனர். பிறகு ஆபரேசனுக்கு பிறகு 3 மாதங்கள் வரை பேசாமல் இருந்தேன். அப்படி ஆறு மாதங்கள் வரை இந்த சிகரட் பழக்கம் என்னை பேசாமல் இருக்கச் செய்துவிட்டது.

பேசுவதுதான் என் தொழில், வாழ்க்கை என்பதால் அன்றோடு சிகரட் பழக்கத்தை விட்டு விட்டேன். அதில் இருந்து சிகரட் பழக்கமே என்னிடம் இல்லை. யாராவது அந்த பழக்கத்தில் இருந்தாலும் உடனடியாக அதை விட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று அந்த நேர்காணலில் அறிவுறுத்தி இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

author avatar
Sumathi