BREAKING: நடிகர் ரவி மோகன் சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு..!

By Soundarya on ஆடி 23, 2025

Spread the love

படத்தில் நடிப்பதற்காக பெற்ற முன் பணத்தை திரும்ப அளிக்காத வழக்கில் 5.9 கோடிக்கான சொத்து ஆவணங்களை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இரு தரப்புக்கு இடையேயான பிரச்சனையை தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தரை  நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.