Connect with us

40 வயதிலும் இவ்ளோ இளமையா இருக்காரே…! ‘7G ரெயின்போ காலனி’ நடிகரின் லேட்டஸ்ட் வீடியோ…!

CINEMA

40 வயதிலும் இவ்ளோ இளமையா இருக்காரே…! ‘7G ரெயின்போ காலனி’ நடிகரின் லேட்டஸ்ட் வீடியோ…!

 

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 7G ரெயின்போ காலனி. படம் வெற்றிபெற்றதோடு பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. இந்த படத்தில் ஹீரோவாகா ரவி கிருஷ்ணா நடித்திருந்தார். இதுதான் அவருக்கு முதல் படம். படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதோடு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதும் இவருக்கு கிடைத்தது.

   

படத்தில் ரவி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகை சோனியா அகர்வால் நடித்திருந்தார். இவரும் தனது நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருப்பார். இந்நிலையில் 7G ரெயின்போ காலனி படம் வெளியாகி சுமார் 17 வருடங்கள் ஆன நிலையில், நடிகர் ரவி கிருஷ்ணா பற்றிய எந்தவொரு புகைப்படமும் , இணையத்தில் வெளியானது கிடையாது. இந்நிலையில் சமீபத்தில் 7G ரெயின்போ காலனி இந்த மாத இறுதியில் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாகவும்,

அதற்காக ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரவி கிருஷ்ணா மற்றும் நடிகை சோனியா அகர்வால் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். தற்பொழுது நடிகர் ரவி கிருஷ்ணா பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 40 வயசுலயும் இவ்ளோ இளமையா இருக்காரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

Continue Reading
To Top