பிரபல தமிழ் திரையுலக நடிகர் ரஞ்சித் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இவர் பொன்விலங்கு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நேசம் புதிது படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பிரியா ராமனை காதலித்து நடிகர் ரஞ்சித் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் பிரியா ராமன் மாலிவுட் பக்கம் சென்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.

இதனையடுத்து கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு ரஞ்சித்தும் பிரியா ராமனும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஞ்சித் நடிகை கே.ஆர் விஜயாவின் சகோதரியின் மகள் ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார்.

அந்த திருமணமும் சில மாதங்கள் கூட நீடிக்காததால் ரஞ்சித் விவாகரத்து செய்து கொண்டு தனிமையில் வாழ்ந்து வந்தார். விவாகரத்து பெற்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண நாளில் மீண்டும் நடிகர் ரஞ்சித் தனது முதல் மனைவியுடன் புது வாழ்க்கையை தொடங்கி 2018-ஆம் ஆண்டு முதல் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். முதல் காதல் மனதை விட்டு நீங்காது என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

