நடிகர் ரஞ்சித், தமிழ் சினிமாவில் நன்கு பரிச்சயமான ஒரு நடிகர். ரசிகர்களுக்கு மிக பிடித்தமான நடிகர்களில் இவரும் ஒருவர். யதார்த்தமான நடிப்பை தருபவர்/. குறிப்பாக இவர் பேசுவது கொங்கு தமிழில் யதார்த்தமாக இருக்கும். இவர் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பொன்விலங்கு படம் மூலம், தமிழ் சினிமாவுக்குள் வந்த ரஞ்சித் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மைனர் மாப்பிள்ளை, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி, புதுமைப்பித்தன், நேசம் புதுசு, நட்புக்காக உள்ளிட்ட படங்களில் நடித்தார். பீஸ்மர் என சொந்த படம் தயாரித்து, இயக்கி, நடித்து நஷ்டப்பட்டார்.

இதையடுத்து மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கடல் பூக்கள் படத்தில், பாரதிராஜா மகன் மனோஜ்க்கு பின்னணி குரல் கொடுத்தவர் ரஞ்சித் தான். சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் ரஞ்சித், இப்போது டிவி சீரியல்களில் செந்தூரப்பூவே, பாக்கியலட்சுமி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். ரஞ்சித், கடந்த 1999ம் ஆண்டில், நடிகை பிரியாராமனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில், 2014ம் ஆண்டில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதே ஆண்டில், பழம்பெருமை நடிகை கேஆர் விஜயாவின் பேத்தி ராகசுதாவை, ரஞ்சித் 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், ஒரே ஆண்டில் அவரை விவகாரத்து செய்துவிட்டார் ரஞ்சித்.

இந்நிலையில், 3 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டில் விவகாரத்து செய்த தன் மனைவி பிரியாராமனை மீண்டும் திருமணம் செய்துகொண்டார் ரஞ்சித். இப்போது தன் பிள்ளைகளுடன், மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ரஞ்சித். பிரியாராமன், இப்போது செம்பருத்தி தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இதற்கு முன்பாக சினிமாவில் பல படங்களில் பிரியாராமன் நடித்திருக்கிறார். ரஜினி டைரக்ட் செய்த வள்ளி படத்தில் கதாநாயகி இவர்தான். சூரியவம்சம், பொன்மனம், நேசம் புதுசு என பல படங்களில் பிரியாராமன் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
