நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் பல்வான் தேவன் கேரக்டரில் நடித்த நடிகர் ராணா டகுபதியை இந்திய சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. 6.2 அடி உயரத்தில் 120 கிலோ எடையில் அவரது ஆஜானுபாகுவான தோற்றமும் கம்பீரமான நடிப்பும் வில்லனாக அவரது கொடூரமான செயல்களும் அந்த படத்தை பலமடங்கு விறுவிறுப்பாக்கி மாபெரும் வெற்றிப் படமாக மாற்றியது. ஆனால் அப்படி ஒரு கெத்தான தோற்றத்தில் இருந்த நடிகர் ராணா டகுபதி தற்போது மெலிந்து போய் உடல் தளர்ந்து மிகவும் பலவீனமாக தோற்றத்தில் காணப்படுகிறார்.
சமீபத்தில் இதுகுறித்து நடிகர் ராணா டகுபதி கூறியதாவது, பாகுபலி 2 படம் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு கிட்னி பெயிலியர் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் ஏற்கனவே கமிட்டான படங்களிலிருந்து வெளியேறி அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டேன்.
அந்த நேரத்தில் இமேஜ், ஸ்டார் அந்தஸ்து போன்றவற்றில் எல்லாம் எனது கவனம் இருக்கவில்லை. உயிர் பிழத்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருந்தேன் என்று நடிகர் ராணா டகுபதி கூறியிருக்கிறார். மேலும் ஒரு வருடம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்ற நிலையில் வேறொரு நபர் போல அடையாளம் மாறி ஒல்லியான தோற்றத்தில் இந்தியாவுக்கு வந்து இறங்கி இருக்கிறார். தனது தோற்றம் மாறிவிட்டதால் ஒப்புக்கொண்ட படங்களில் கூட நடிக்க முடியவில்லை என்றும் வருத்தமாக ராணா டகுபதி கூறியிருக்கிறார்.
