Categories: சினிமா

தென்னிந்தியாவில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் காரை வாங்கிய ராம்சரண்.. எத்தனை கோடி தெரியுமா..?

Spread the love

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் ராம்சரண் தற்போது விலை உயர்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் காரை வாங்கி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் ராம்சரண். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து சினிமாவில் நல்ல வாய்ப்புகள் இவரை தேடி வர தொடங்கியது. இவர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து ஒரு மாஸ் ஹீரோ என்ற பெயரை கொடுத்தது.

பின்னர் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார். இந்நிலையில் தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு கேம் சேஞ்சர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பொருள் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகி இருக்கின்றது. இதில் ராம்சரண் உடன் எஸ்ஜே சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் தொழிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும் ராம்சரனுக்கு ஜோடியாக இப்படத்தில் கியாரா அத்வானி நடித்து வருகின்றார். தென்னிந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய நடிகராக வலம் வரும் இவர் புதிதாக rolls-royce ஸ்பெக்டர் என்ற காரை வாங்கி இருக்கின்றார்.

அதாவது ராம் சரண் தனது மனைவி மற்றும் மகளுடன் ஹைதராபாத் விமான நிலையம் வந்த இவர் ரோல்ஸ் ராய்ஸ்பெக்டர் என்ற காரில் வந்து இறங்கினார். இது ஒரு எலக்ட்ரிக் கார் மாடலாகும். இந்த காரில் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 530 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். இந்த கார் இந்தியாவில் 7.5 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த காரை இந்தியாவிலேயே முதன் முதலாக பாஷ்யம் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த யுவராஜ் வாங்கி இருந்தார். அதைத்தொடர்ந்து இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இந்த காரை வாங்கி இருந்தார்கள். பின்னர் rolls-royce ஸ்பெக்டர் காரை ராம்சரண் தான் வாங்கி இருக்கின்றார். ராம் சரணுக்கு பொதுவாக கார் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதனால் பல சொகுசு கார்களை வாங்கி வருகின்றார். அவர் வைத்திருக்கும் கார்களிலேயே விலை உயர்ந்த கார் இதுதானாம்.

Mahalakshmi

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

5 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

5 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

5 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

5 மணத்தியாலங்கள் ago