மதுரையில் ஒளிந்து கிடந்த “வைகைப்புயல் வடிவேலு”.. கண்டெடுத்து தமிழ் சினிமாவுக்கு கொடுத்த ராஜ்கிரண்.. பலரும் அறியாத பிளாஷ்பேக்..!

By Nanthini on புரட்டாதி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் மனநிலையை ஒருநிலைப்படுத்த பயன்பட்டு வரும் ஒரு மந்திரச் சொல் தான் வடிவேலு. இவருடைய காமெடிக்கு அனைவருமே அடிமை. 90களில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்த இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார். நாடகக் கலையில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த வடிவேலுவின் சினிமா தாகத்திற்கு தீனி போட்டவர்தான் நடிகர் ராஜ்கிரண். அவரின் முதல் படம் தான் ராசாவின் மனசிலே. முதல் படத்திலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தனக்கான முகவரியை உருவாக்கிக் கொண்டவர் வடிவேலு.

   

தமிழ் சினிமாவில் காமெடி என்றால் வைகைப்புயல் வடிவேலு தான் அனைவருடைய ஞாபகத்திற்கும் வரும். அடுத்தடுத்து தன்னுடைய அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி நகைச்சுவை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை கொண்டுள்ளார். இப்படி பல புகழ் மிக்க வடிவேலும் மதுரையை சேர்ந்தவர். இவர் முதலில் புகைப்படங்களுக்கு பிரேம் போடும் வேலையை தான் செய்து வந்தார். இவர் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தில் இருக்கும் அனைவருமே சிரித்த முகத்துடன் தான் இருப்பார்கள். இவருடைய காமெடிக்கு அனைவருமே அடிமை. இப்படி இருக்கையில் ராஜ்கிரன் ஒருநாள் மதுரையில் ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றுள்ளார்.

   

 

காலை திருமணம் முடிந்து திரும்பவும் ரூமுக்கு வந்து விட்டார். மீண்டும் இரவு தான் சென்னைக்கு ரயில். அதுவரை மதுரையில் தான் இருக்க வேண்டும். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் மாலை வரை எங்கிருந்தால் போர் அடிக்கும் என் நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரை அனுப்பி வைக்கிறேன், அவர் பேசினால் நேரம் போவது தெரியாது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற வடிவேலு முதலில் தான் என்ன தொழில் செய்கிறேன் என்று பேச தொடங்கி படிப்படியாக தன்னிடம் உள்ள காமெடிகளை இறக்கினார். அன்று மாலை வரை வடிவேலு பலவிதமான பாணியில் தனது காமெடியை கூறி நடித்துக் கொண்டிருக்க ராஜ்கிரன் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

பிறகு ரயில் ஏறி சென்னைக்கு ராஜ்கிரண் சென்று விட்டார். பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு திண்டுக்கல்லில் ராசாவின் மனசிலே திரைப்படம் சூட்டிங் நடைபெறுகிறது. அப்போது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் புதிதாக யாரையாவது நடிக்க வைக்க வேண்டும் என்ற யோசனையில் கஸ்தூரிராஜாவும் ராஜ்கிரனும் தேடுகின்றனர். உடனே வடிவேலு ராஜ்கிரன் நினைவுக்கு வர, உடனே மதுரையில் திருமணம் நடைபெற்ற அந்த ரசிகருக்கு போன் செய்து நாளை காலை 7 மணிக்கு திண்டுக்கல்லில் வடிவேலு இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார். அதனைப் போலவே வடிவேலு அங்கு சென்ற நிலையில் அவருக்கு இரண்டு சீன்கள் மட்டும் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அந்த இரண்டு காட்சிகளிலும் நடித்து விட்ட பிறகு வடிவேலு கிளம்புகிறேன் என்று கூறினார். உடனே ராஜ்கிரன் சற்று நேரம் அமரு என்று கூறிவிட்டு பிறகு தயாரிப்பாளரிடம் பேசிய பிறகு அந்த படத்தில் சுமார் 8 சீன்களுக்கு மேல் வடிவேலுவை வைத்து நடிக்க வைத்தார். அந்த அனைத்து காட்சிகளிலும் ராஜ்கிரன் உடன் இருப்பார். அந்தத் திரைப்படத்தில் வடிவேலுக்காக வச்ச பாட்டு தான் போடா போடா புண்ணாக்கு. பிறகு அந்த திரைப்படத்தில் நடித்ததும் அடுத்தடுத்து வடிவேலுக்கு வாய்ப்புகள் கிடைக்க ராஜ்கிரண் உறுதுணையாக இருந்துள்ளார். இப்படி தான் மதுரையில் ஒளிந்து கொண்டிருந்த வடிவேலுவை ராஜ்கிரண் கண்டெடுத்தார்.