ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாத பிரியா மீண்டும் தனது தந்தையுடன் சேர்ந்து இருக்கின்றார். தற்போது ராஜ்கிரண் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 80’ஸ், 90’ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக வளம் வந்தவர் ராஜ்கிரன். இவரின் வளர்ப்பு மகளான பிரியா சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜா என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்தை மீறி திருமணம் செய்து கொண்டார். தங்களுடைய திருமண வீடியோ மூலம் ரசிகர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் ராஜ்கிரன் தரப்பிலிருந்து அவர் என்னுடைய மகளே கிடையாது.
அந்த சீரியல் நடிகர் தன்னை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இப்படி செய்திருக்கின்றார். அவருக்கு பணம் தான் முக்கியம். பணத்திற்காக தான் இப்படி திருமண நாடகம் போட்டு இருக்கின்றார் என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து பிரியா அதனை மறுப்பு தெரிவித்து நாங்கள் உண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களை வெறுத்தவர்கள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என்றெல்லாம் சவால் விட்டிருந்தார்.
ஆனால் கடைசியில் ராஜ்கிரன் சொன்னபடி தான் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியா கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கடந்த 2022 ஆம் ஆண்டு முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த திருமணத்திற்கு பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம். நாங்கள் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
எங்களுடைய திருமணம் சட்டபூர்வமான திருமணம் கிடையாது. இந்த திருமணத்தினால் என்னை வளர்த்த அப்பாவை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஒரு பிரச்சனை என்று வந்தபோது என்னை கைவிடாமல் காப்பாற்றி இருக்கிறார். அவர் எனக்காக செய்த செயல் நான் எதிர்பார்க்காத கருணை, மன்னித்திடுங்க டாடி என்று கை கூப்பி பேசியிருந்தார்.
அதைத் தொடர்ந்து பிரியா மீண்டும் ராஜ்கிரனுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஜ்கிரண் அவரது மனைவி மற்றும் மகள் மகன்களுடன் கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் தனது மகனின் திருமணம் குறித்தும் கூறியிருந்தார். அவர் அதில் தெரிவித்திருந்ததாவது “என் மகளை வெளி உலகத்தை காட்டாமல் வளர்த்து விட்டேன்.
அதுக்கு வெளி உலகம் தெரியவில்லை. சின்னக் குழந்தை போல் வெளி உலகத்தை பார்க்கணும் என துடித்தது, வெளியே போய் பாத்துட்டு வந்துடுச்சு. அவ்வளவுதான் அதுக்கு மேல அதுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கல. அவரின் அறியாமையால இந்த தவறு நடந்துருச்சு, என் பொண்ணு பாடம் படிச்சிட்டு திரும்பி வந்துருச்சு. திரும்பி வந்தவுடன் நான் என் மகளை கட்டிப்பிடித்து அனைத்து தங்கம் செல்லம் பொண்ணு என்று கொஞ்சினேன். என் பொண்ணு மீண்டும் மனசார ஏத்துக்கிட்டேன். அவர ஒரு கேள்வி கூட கேட்கணும்னு எனக்கு தோணல” என அந்த பேட்டியில் ஓபனாக பேசியிருந்தார் ராஜ்கிரண்.