#image_title
தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார் ராஜ்கிரண். இளையராஜாவின் தீவிர விசிறியான இவர் தன் படங்கள் அனைத்திலும் இளையராஜா இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.
இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’. உதவி இயக்குனராக இருந்த போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய ஒரு கதையை அவர் அப்போது தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரணிடம் கூறியுள்ளார். அந்த கதை ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், அதில் இருந்த மாயாண்டி என்ற முரடனின் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இந்த படம் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து நடிகராக அவர் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.
அதன்பின்னர் அவர் நடித்த அரண்மனைக் கிளி மற்றும் எல்லாமே என் ராசாதான் ஆகிய இருபடங்களும் சூப்பர் ஹிட்டாகின. கதாநாயகனாக முதல் மூன்று படங்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்த அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டார்கள்.
அப்படிதான் அவரை வைத்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவரை அனுகியுள்ளார். வெளி தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுவதில்லை என ராஜ்கிரண் சொல்லவே, அவரை வழிக்குக் கொண்டுவர அப்பொது ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சூழலில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பளமாக தருகிறேன் எனக் கூறி அவரை நடிக்க சம்மதிக்க வைத்துள்ளார்.
ஆனால் பெரும் பொருட்செலவில் அப்படி உருவாக்கப்பட்ட மாணிக்கம் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர் ராஜ்கிரண் கதாநாயகனாக வெற்றிப் படமே கொடுக்கவில்லை. பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக ரீ எண்ட்ரி கொடுத்தார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…