Categories: சினிமா

சிவாஜி விழாவுக்கு வந்த ஜெயலலிதா… பகிரங்கமாக மேடையில் எச்சரித்த ரஜினிகாந்த் – பிரபலம் சொன்ன பகீர் சம்பவம்!

Spread the love

கடந்த 1990களில் நடிகர் ரஜினிகாந்துக்கும் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே ஒரு மறைமுக மோதல் போக்கு இருந்து வந்தது. அதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது அந்தணன் கூறியதாவது. நடிகர் திலகம் சிவாஜிக்கு செவாலியே விருது கொடுக்க முடிவு செய்து பிரான்ஸ் நாட்டிலிருந்து இங்கே விருதை கொண்டு வந்தார்கள்.

சென்னையில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில்தான் இந்த விழாவை நடத்தினார்கள். அப்போது ஜெயலலிதாதான் முதலமைச்சர். ஒட்டுமொத்த திரையுலகமும் அந்த விழாவிற்கு வந்துவிட்டார்கள். கங்கை அமரனின் இசைக் கச்சேரி ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஜெயலலிதா விழாவுக்கு வரவில்லை. இதனால் சிவாஜி ரஜினி உள்ளிட்டோர் எல்லாம் கடுப்பாகி விட்டார்கள். ஒருவழியாக ஜெயலலிதா விழாவுக்கு வந்துவிட்டார். அனைவருமே எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள்.

ஆனால் ரஜினி சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டார். அதுவே எல்லாருக்கும் பெரிய ஷாக் ஆகிவிட்டது. அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய ரஜினி, ஜெயலலிதாவை பார்த்து அவர் லேட்டாக வந்ததை குறிப்பிட்டு, இங்கே பாருங்க இதெல்லாம் எனக்கு பிடிக்காது என்று விரலை உயர்த்தி பேசினார். அப்போது எல்லோருமே உச்சகட்ட அதிர்ச்சியாகி விட்டார்கள். ஏனென்றால் ஜெயலலிதாவை பார்த்து எல்லோருமே தொடை நடுங்கிக் கொண்டிருந்த காலம் அது என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

6 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

15 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

26 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

33 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

53 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago