நான் இருக்கேன், கவலைப்படாதீங்க.. LYCA-விற்கு உதவ ரஜினி எடுத்த திடீர் முடிவு..!

By Nanthini on ஏப்ரல் 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெய்லர் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரஜினியை தவிர இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை பற்றி இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் முதல் பாகத்தில் நடித்திருந்த சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இரண்டாம் பாகத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ரஜினியின் பர்த்டே ஸ்பெஷல்: தலைவரின் டாப் 10 பஞ்ச் டயலாக்குகள்

   

இந்நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க மறுப்பக்கம் கூலி திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இந்திய திரை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

   

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கூலி' படத்தின் முதல் வியாபாரம்.. ரூ.120 கோடி என  தகவல்..! - தமிழ் News - IndiaGlitz.com

 

இந்நிலையில் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினி அடுத்ததாக எந்த படத்தில் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான கதையை ரஜினி கேட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இப்படியான நிலையில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு உதவ ரஜினி முன்வந்துள்ளார். அதாவது லைகா தற்போது பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் அவர்கள் தயாரிக்கும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரஜினியை வைத்து 2.0, தர்பார், லால் சலாம், வேட்டையன் ஆகிய படங்களை லைகா தயாரித்த நிலையில் இந்த படங்களில் 2.0 படத்தை தவிர மற்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஜெயிலர் சூட்டுடன் ஆரம்பிக்கப் போகும் தலைவர்-170.. கேட்ட சம்பளத்தை அப்படியே  கொடுத்த லைக்கா - Cinemapettai

இப்படியான நிலையில் லைகா பின்னடைவில் இருக்கும் இந்த சமயத்தில் ரஜினி தானாக முன்வந்து லைகாவிற்கு ஒரு படம் பண்ண உள்ளதாக கூறியுள்ளார். முன்பணம் எதுவும் வாங்காமல் கால் சூட் கொடுத்து படம் முடிந்த பிறகு சம்பளத்தை பெற முடிவு செய்துள்ளாராம். அதிலும் குறிப்பாக மற்ற படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தில் லைகாவிற்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க ரஜினி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னை வைத்து பல படங்களை தயாரித்த லைகா நிறுவனத்திற்காக இந்த முடிவை ரஜினி எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பே பல தயாரிப்பாளர்களுக்கு தானாக முன்வந்து ரஜினி உதவிய நிலையில் தற்போது லைகா விற்கும் உதவ முன்வந்துள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் ரஜினியை பாராட்டி வருகிறார்கள்.