நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் இவர் 70 வயதை தாண்டிய நிலையிலும் தற்போது வரை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். மாஸ் ஹீரோவாக அசதி வரும் இவர் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார்.
நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இளம் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருப்பார்களா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு நிக்காமல் ஓடிக் கொண்டிருக்கின்றார் ரஜினிகாந்த், தற்போது டி ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. மேலும் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருந்து வருகின்றது. வருகிற ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக புது தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே நடிகர் சூர்யாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகின்றார் .இப்படத்தின் ஒரு சில வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்தமானில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நடிகர் ரஜினியிடம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதை ஒன்றை கூறி இருக்கிறார். இந்த கதை ரஜினிக்கு மிகப் பிடித்துப் போனதால் இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜன் படத்தில் நடிக்கப் போவதால் இப்படத்தை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.
மேலும் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஏற்கனவே பேட்ட என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் அமைந்திருந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது .இதனால் மீண்டும் அடுத்த திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.