ராஜசிம்மன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் வில்லன் நடிகர் ஆவார். 2015 ஆம் ஆண்டு ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் ராஜசிம்மன். தொடர்ந்து ‘கொம்பன்’, ‘குட்டி புலி’, ‘கொடி’, ‘நண்பேன்டா’ போன்ற திரைப்படங்களில் கொடூரமான வில்லங்க கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராஜசிம்மன்.
தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் கருணை உள்ளம் கொண்டவர் ராஜசிம்மன். தினமும் 100 பேருக்கு உணவளிப்பவர். மேலும் பல பேருக்கு உதவி செய்து வருகிறார் ராஜசிம்மன். தற்போது பி2 திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜசிம்மன் தயாரிப்பாளரை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால் ஒரு படத்துக்காக கமிட் பண்றீங்க, நடிச்சு முடிச்சதும் பணம் தராமல் நாய் மாதிரி அலைய வைக்கிறீங்க. சரின்னு பொறுத்துட்டு போனேன். ஒரு தடவை ஆபரேஷனுக்கு ஒருத்தருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நீங்கள் தராமல் தடுத்தீங்க அதனால எனக்கு கோவம் வந்தது நான் போயிட்டேன்.
கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் நடிக்கிறதுக்கு கூப்பிடுறீங்க. அப்போ நான் தெளிவா சொல்றேன். எனக்கு நடிப்புதான் தொழிலு ,என்னோட தொழில் நான் நேசிக்கிறேன். ஆனா எனக்கு நடிக்க வேண்டிய தேதிகளை சொல்லிட்டு எனக்கு முதல்ல பேமென்ட் எல்லாமே கொடுத்திருங்க நான் வந்து நடித்துக் கொடுத்துவிடுகிறேன் என்று நான் சொல்லி இருந்தேன். நீங்க என்ன பண்ணுனீங்க? நைட்டு 12:30 மணிக்கு பாதி பேமென்ட் போட்டுவிட்டு காலையில் 7:00 மணிக்கு ஷூட்டிங்னு எனக்கு மெசேஜ் அனுப்பிருக்கீங்க.
காலைல 7:00 மணிக்கு சூட்டிங் வரல அப்படின்னு எனக்கு ரெட் கார்டு கொடுக்குறீங்க இதுல என்ன நியாயம் இருக்கு ?எனக்கு ரெட் கார்டு கொடுக்க நீங்க யாரு? நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா? இல்லை வாட்ச்மேனா? கூப்பிடுற நேரம் எல்லாம் ஓடி வந்துருவாங்க அப்டிங்கிறதுக்கு. எங்களுக்கும் வேலை இருக்குது. அன் டைம்ல பேமென்ட் போட்டுட்டு காலையில ஏழு மணிக்கு ஷூட்டிங் வரலன்னு நீங்க எப்படி ரெக்கார்டு எனக்கு தரலாம்?.சரி. அதையும் விட்டுட்டு சமரசமா பேசலாம் என்ன பிரச்சனை பேசி முடிக்கலாம்னு கூப்பிட்டா அதுக்கும் நீங்க தயாரா இல்லை.

நான் கேட்கிற கேள்விகளுக்கும் நீங்க பதில் சொல்லவே மாட்டேன்றீங்க. நீங்க எல்லாரும் உக்காந்துட்டு அறிக்கை விட்டுட்டு இருக்கீங்க. ஒரு தனி மனிதனை வேலை செய்ய விடாமல் தடுக்க உங்களால் எப்படி முடியும்? எத்தனையோ தங்கமான புரொடியூசர் இருக்காங்க அவங்களால தான் சினிமா வாழ்ந்துட்டு இருக்கு. நீங்க கொடுக்கிற சம்பளத்துல தான் நாங்க வாழுறோம் ஒத்துக்குறோம் இல்லன்னு சொல்லல. ஆனா மனிதாபிமானத்தோடு நடந்துக்கோங்க எங்களையும் மனுஷங்களா நடத்துங்க என்று தயாரிப்பாளரை கிழித்து தொங்கவிட்டுள்ளார் நடிகர் ராஜசிம்மன்.
