நம்ம வனிதா அக்கா,  நடிகர் ராஜ்கிரணுடன் இப்படி ஒரு ரொமான்ஸ் பண்ணியிருக்கங்களா..? இணையத்தில் திடீரென வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர்.

   

இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது. தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை வனிதா. அந்தவகையில் 80’ஸ் முன்னணி நடிகர் மைக் மோஹனுடன் இணைந்து ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு முன்  அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகை என்றால் அது நடிகை வனிதா தான்.  இவருக்கும் திருமணத்திற்கும் ஏக பொருத்தம். இதுவரை ஏகப்பட்ட திருமணங்கள், சில காதல்கள் என தன் வாழ்க்கையை எப்போதுமே ஒரு கமிட்மென்ட்டில் வைத்துக் கொள்வார். இவர் தன் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து அடுத்த ஒரு மாதத்திலேயே அவரை விட்டும் பிரிந்துவிட்டார். பீட்டர் பால் இறந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தனித்தே வாழ்ந்து வருகிறார்.

நடிகை வனிதா நடிகர் ராஜ்கிரனுடனும் அந்த காலத்தில் காதல் கிசுகிசுவில் சிக்கியது பலரும் அறிந்ததே. ராஜ்கிரணும் வனிதாவும் இணைந்து மாணிக்கம் என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்தபோது ராஜ்கிரணுக்கும் வனிதாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகி விட்டதாக கிசுகிசு அந்தகால பத்திரிகைகளில் வெளியானது. தற்பொழுது நடிகை வனிதாவும், நடிகர் ராஜ்கிரணும் இணைந்து நடித்த மாணிக்கம் படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் திடீரென வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘நம்ம வனிதா அக்காவா இது..?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Isai Trendz (@isai_thenral143)