நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ஸ்டார் படம் வருகிற மே 10ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், கவின் கைவசம் இன்னும் இரு திரைப்படங்கள் உள்ளன. இந்த நிலையில், அடுத்ததாக கவின் நடிக்கப்போகும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் என்பவர் இயக்கவுள்ள திரைப்படத்தில் தான் கவின் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.
மேலும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதன்மூலம் கவின் – ஆண்ட்ரியா முதல் முறையாக இணைகிறார்கள். திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
Exclusive : #Kavin07 Update ????
– #kavin will next be seen in a film with a debutant director ????
– director #VikrananAshok is going to direct this film ✨
– #Andrea is confirmed to play portray an antagonist in the film????
– GV Prakash has been roped in as the music director for… pic.twitter.com/GlCMpjhTKp— Movie Tamil (@MovieTamil4) April 26, 2024