என்னை பெருமைப்படுத்திய அன்பு தம்பி.. விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கிய ராகவா லாரன்ஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on மே 1, 2024

Spread the love

நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வினின் புல்லட் திரைப்படத்தை பார்த்துவிட்டு அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ஆனால் வெள்ளி திரையில் கடினமான முயற்சிக்குப் பிறகு இந்த இடத்தை அடைந்திருக்கின்றார்.

   

இவர் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான உழைப்பாளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதிலும் பின்னணி நடனம் ஆடுபவராக திரையில் தோற்றிய இவர் படிப்படியாக முன்னேறி 1999 ஆம் ஆண்டு ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த நடிகராக அறிமுகமானார்.

   

பிறகு அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான அற்புதம் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக களம் இறங்கினார். தொடர்ந்து நடன இயக்குனராக வளம் வந்து இவர் தற்போது தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருகின்றார்.

 

தனது படத்தின் மூலம் பேரும் புகழையும் எட்டியதை விட தனது உதவும் குணத்தால் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கின்றார். தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் இயக்கி வருகின்றார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் என் தம்பி எல்வின் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புல்லட் என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கின்றார்.

அதில் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் . ஆடுகளம், பொல்லாதவன், ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தை தயாரிக்க ஷாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகரான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து தனது தம்பிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்ததாவது “வணக்கம் நண்பர்களே, இந்த சிறப்பான தருணத்தை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் என் சகோதரன் எல்வின்னை புல்லட்  திரைப்படத்தில் திரையில் பார்த்தேன். அவரது நடிப்பில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .இது அவருக்கான எனது பரிசு. நடிப்பால் என்னை பெருமைப்படுத்தியதற்காக ஒரு சிறந்த முத்தம். ஒட்டு மொத்த பட குழுவில் இருக்கும் எனது வாழ்த்துக்கள். என் சகோதரனுக்கு உங்கள் அனைவரின் ஆசியும் வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறா.ர் மேலும் அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றையும் பரிசாக வழங்கியிருக்கின்றார்.