ஒன்றிணைந்த பிரபலங்கள்.. திருத்தணி கோயிலில் இனிதே நடந்து முடிந்த பிரேம்ஜி கல்யாணம்.. தாலி கட்டியதும் மனைவிக்கு அன்பு முத்தம்..!

By Mahalakshmi on ஜூன் 9, 2024

Spread the love

திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதியின் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

   

 

   

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட நடிகர் பிரேம்ஜி சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக நடிகராக அறிமுகமானார். பின்னர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசதி வருகிறார்.

 

குறிப்பாக இவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களில் கட்டாயம் இவரது காட்சிகள் இருக்கும். அது மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு வெளியான சத்திய சோதனை என்று திரைப்படத்தின் ஹீரோவாகவும் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் இவர் பிரபல இயக்குனர் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின் இளைய மகன் ஆவார்.

இவருக்கு பல வருடங்களாக திருமணம் நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று வெற்றிகரமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. திருத்தணி முருகன் கோயிலில் இவர்களது திருமணம் நடைபெறும் என்று ஏற்கனவே வெங்கட் பிரபு அறிவித்திருந்த நிலையில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்று காலை அவர்களது திருமணம் இனிதே நடத்த முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.