நடிகர் பிரேம்ஜி முரட்டு சிங்கிளாகவே காலத்தை கழித்து வந்த நிலையில் இதை பெருமையாக பல இடங்களிலும் பேசி வந்தார். ஆனால் அவரையும் காலம் திருமண பந்தத்தில் சேர்த்து விட்டது. சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை பிரேம்ஜி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி கலாட்டா செய்தவர் தான் பிரேம்ஜி. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். கடந்த வருடம் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். நடிகர் பிரேம்ஜி பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த தம்பி ஆவார்.
தன்னுடைய அண்ணன் படங்களில் நடித்து தனது டைமிங் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவருடைய கேங்கிலேயே தொடர்ந்து முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார். இதைப் பெருமையாகவும் பல பேட்டிகளில் இவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது. நட்பாக தொடங்கிய இவர்களுடைய சினேகம் காதலாக மாறி இறுதியாக திருமணத்தில் நிறைவடைந்துள்ளது. திருத்தணி முருகர் கோவிலில் தான் இவர்களுடைய திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது.
தற்போது பிரேம்ஜி திருமண வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். இவருடைய மாமியார் சமீபத்தில் பிரேம்ஜி பெயரிலேயே ஒரு புதிய தொழிலை தொடங்கியிருந்தார். இந்த நிலையில் பிரேம்ஜி மாமியார் மசாலா என்ற பெயரில் அவர் ஒரு மசாலா நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் அந்த மசாலா குறித்து பிரேம் செய்யும் அவருடைய மனைவியும் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு ப்ரமோஷன் செய்து வருகிறார்கள். அதன்படி சமீபத்தில் பிரேம்ஜி மாமியார் மசாலாவுக்கு மட்டன் 65 செய்து பிரேம்ஜி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…