“நான் சமையல் பண்ணல அதுதான் என்ன பண்ணுச்சு”.. கிச்சனில் பிரேம்ஜி பண்ண அட்ராசிட்டியை வீடியோவாக வெளியிட்ட அவரின் மனைவி..!

Spread the love

நடிகர் பிரேம்ஜி முரட்டு சிங்கிளாகவே காலத்தை கழித்து வந்த நிலையில் இதை பெருமையாக பல இடங்களிலும் பேசி வந்தார். ஆனால் அவரையும் காலம் திருமண பந்தத்தில் சேர்த்து விட்டது. சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை  திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி கலாட்டா செய்தவர் தான் பிரேம்ஜி. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

நடிகர் பிரேம்ஜி பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த தம்பி ஆவார். தன்னுடைய அண்ணன் படங்களில் நடித்து தனது டைமிங் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவருடைய கேங்கிலேயே தொடர்ந்து முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார். இதைப் பெருமையாகவும் பல பேட்டிகளில் இவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது.

நட்பாக தொடங்கிய இவர்களுடைய சினேகம் காதலாக மாறி இறுதியாக திருமணத்தில் நிறைவடைந்துள்ளது. திருத்தணி முருகர் கோவிலில் தான் இவர்களுடைய திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. தற்போது பிரேம்ஜி திருமண வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். இவருடைய மாமியார் சமீபத்தில் பிரேம்ஜி பெயரிலேயே ஒரு புதிய தொழிலை தொடங்கியிருந்தார். பிரேம்ஜி மாமியார் மசாலா என்ற பெயரில் அவர் ஒரு மசாலா நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் அந்த மசாலா குறித்து பிரேம் செய்யும் அவருடைய மனைவியும் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு ப்ரமோஷன் செய்து வருகிறார்கள்.

இப்படியான நிலையில் பிரேம்ஜி அடிக்கடி தங்கள் வீட்டில் சமைத்து வருவதை இந்து பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார். அதன்படி தனது கணவர் பிரேம்ஜி கிச்சனில் சமைப்பதாக கூறிவிட்டு செய்த அட்ராசிட்டியை வீடியோவாக எடுத்து அவரின் மனைவி இந்து வெளியிட்டுள்ளார். அதில் பிரேம்ஜி நான் சமையல் பண்ணல அதுதான், என்ன வச்சு பண்ணுச்சு என்று காமெடியாக கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

5 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

29 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

37 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

43 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

43 minutes ago

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

51 minutes ago