நடிகர் பிரசாந்தி 55வது திரைப்படத்தை ஹரி இயக்க உள்ளார்.. நேற்று பிரசாந்தி 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதற்கான பூஜையும் போடப்பட்டது. அதே சமயம் இந்த திரைப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கின்றார். சுமார் 23 வருடங்களுக்கு முன்பு 2002 ஆம் ஆண்டு ஹரி மற்றும் பிரசாந்த் கூட்டணியில் தமிழ் படம் வெளியாகி இருந்தது. தற்போது மீண்டும் இவர்கள் இணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் மற்றும் பூஜை என பல ஆக்சன் திரைப்படங்களை எடுப்பதில் இயக்குனர் ஹரி வல்லவர்.

இவர் அருண் விஜயை வைத்து இயக்கிய யானை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிரசாந்துடன் இணைந்திருக்கும் கதைக்களமும் ஆக்சன் மற்றும் காதல் என அனைத்தும் கலந்த கமர்சியல் படமாக எடுக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு ட்ரெண்டிங்கில் உள்ள கதாநாயகிகள் இடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது விஜயின் ஜனநாயகம் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் நிலையில் பிரசாந்தின் அடுத்த படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து அடுத்ததாக ரசிகர்களின் கிரஷ் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கையாடு லோஹர்அவர்களிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் சிம்புக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. பிரசாந்த் 55 ஆவது படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்குவதால் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகளை போட்டால் படம் வெற்றி பெறும் என்று படகு குழுவினர் வலை வீசி தேடி வருகிறார்கள். தற்போது பூஜா ஹெக்டே மற்றும் கையாடு லோஹர் ஆகியோரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்திவரும் நிலையில் இவர்களில் யாராவது ஒருவர் தான் இப்படத்தில் ஹீரோயினியாக நடிக்கப் போகிறார் என தெரிகிறது.
