தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பட்டித் தொட்டி எல்லாம் ஹிட்டான படம் தான் கோமாளி. இந்த திரைப்படத்தின் மூலம் சைமா வழங்கும் அறிமுக இயக்குனர்களுக்கான விருதை வென்று தமிழ் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு தன்னுடைய கலை பயணத்தை தொடங்கியவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காகவும் சைமா வழங்கும் அறிமுக நடிகருக்கான விருதை அவர் பெற்றார். இரண்டு திரைப்படங்கள்தான் இயக்கி இருக்கிறார் என்றாலும் இன்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் டிராகன்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அடுத்ததாக பல திரைப்படங்களில் நடிக்க கவிதாக்கியுள்ளார். இப்படியான நிலையில் பிரதீப் ரங்கநாதன் குறித்து வலைப்பேச்சு அந்தணன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சிவகார்த்திகேயன் அளவுக்கு பிரதிப் ரங்கநாதனுக்கு சினிமாவில் அதிக பிரஷர் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
டிராகன் புரமோஷன் நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் தன்னை பலர் நசுக்குவதாகவும் மிரட்டுவதாகவும் சில வார்த்தைகளை பேசி இருந்தார். வளர்ந்து வரும் நடிகராக இருக்கும்போது இப்படியான சவால்களை எல்லாம் சந்தித்து தான் ஆக வேண்டும். சினிமாவை பொறுத்த வரைக்கும் அன்பு தொல்லைகள் அதிகமாக இருக்கும். லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் திரைப்படம் மூலம் இரண்டாவது வெற்றியை கொடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து பல வெற்றிகளை கொடுப்பார். விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் பிரதீப் ரங்கநாதன் இயக்க வேண்டிய படம் தான்.
முதலில் அவரை அழைத்து தான் ஏஜிஎஸ் நிறுவனம் விஜயிடம் கதை சொல்லிட்டு வாங்க நாம்ப இணைந்து படம் பண்ணலாம் என்று அழைத்தார்கள். ஆனால் பிரதீப் ரங்கநாதன் இப்போ மக்கள் எல்லாரும் என்னை ஹீரோவாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இப்படியான சூழலில் படம் இயக்க நான் வந்து விட்டால் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக வரும்போது என்னை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான்கு ஐந்து வருடங்கள் சென்ற பிறகு வேண்டுமானால் எனக்கு தோன்றினால் இயக்க வருகிறேன் என்று பதில் அளித்துள்ளார். மிகப்பெரிய நடிகர் விஜயின் படத்தை இயக்கவே மறுத்துவிட்ட பிரதீப் ரங்கநாதன் சினிமாவில் எப்படிப்பட்ட உயரத்தையும் அடைந்து விடுவார் என்று அந்த நான் பேசியுள்ளார்.