நடிகர் பிரபு மகளுக்கு இது இரண்டாவது திருமணமா…? முதல் கணவர் இவர்தானா..? காட்டுத்தீயாய் பரவும் செய்தி…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ‘சங்கிலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

   

சமீபத்தில் இவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபுவிற்கு  விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நடிகர் விக்ரம் பிரபு 2012 இல் வெளியான ‘கும்கி’ திரைப்படம் வழியாக திரையுலகில் அறிமுகமானார். தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

2009 இல் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு குணால் என்பவரிடம் திருமணம் நடைபெற்றது. குணால் வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் கணவர் குணாலுடன் அமெரிக்காவில் செட்டில் ஆன ஐஸ்வர்யா,  பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து, தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தற்பொழுது பிரபுவின் மகள்  ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு ஆர்டரின் பெயரில் கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது அவரின் முதல் கணவர் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.