Connect with us

600 கோடி செலவில் உருவாகியுள்ள ‘கல்கி 2898  Ad’.. நெகட்டிவ் ரோலில் தெறிக்க விடும் ஆண்டவர்.. மிரட்டலாக வெளியான டிரைலர்..!

CINEMA

600 கோடி செலவில் உருவாகியுள்ள ‘கல்கி 2898  Ad’.. நெகட்டிவ் ரோலில் தெறிக்க விடும் ஆண்டவர்.. மிரட்டலாக வெளியான டிரைலர்..!

இந்திய சினிமாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கின்றது.

நாக் அஸ்வின் இயக்கி இருக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தை இந்திய சினிமாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள்.  பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கின்றார்.

   

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன், உலகநாயகன் கமலஹாசன், தீபிகா படுகோன் அன்னா பென்  உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமிதாபச்சனின் மிரட்டலான புகைப்படம் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

 

அதைத் தொடர்ந்து தீபிகா படுகோன் புகைப்படம் வெளியாகி போஸ்டர்கள் படு வேகமாக வைரலாகி வந்தது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் கமலஹாசன் நடித்திருக்கின்றார். இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் முதல் பாகத்தில் 19 நிமிடங்கள் வருகிறார்.

இரண்டாவது பாகத்தில் ஒன்றரை மணி நேரமும் அவர் வரவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சமீபத்தில் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதாவது அதில் தெரிவித்திருந்ததாவது கல்கி 2898 எடி திரைப்படத்தின் காட்சிகள் புகைப்படங்கள், படங்கள், இசை உள்ளிட்டவை அனைத்தும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

அதனை பயன்படுத்துவது தவறானது. இதனை பகிர்வது காப்புரிமை சட்டம் 1957 படி சட்டவிரோதமானது. இதனை பகிர்வர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இந்தியா முழுவதும் வெளியாகி இருக்கின்றது.  இப்படத்தின் ட்ரெய்லர் இதோ..

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top