90ஸ் காலகட்டத்தில் வில்லனாக வந்து மிரட்டியவர் நடிகர் பொன்னம்பலம். இவர் 1988 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கலியுகம் படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தார். முதலில் சண்டை கலைஞராக இருந்த பொன்னம்பலம் தனது திறமையால் நடிகராக முன்னேறினார். சத்யராஜ் நடிப்பில் ரிலீசான வால்டர் வெற்றிவேல் படத்தில் கபாலி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பொன்னம்பலம் நடித்தார்.
இதன் மூலம் அவர் பிரபலமடைந்தார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், வெற்றி விழா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் பொன்னம்பலம் நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் பொன்னம்பலத்தின் நடிப்பு மிரட்டலாக இருக்கும். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு விஜயகாந்த் சௌந்தர்யா நடிப்பில் தவசி திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தில் கோட்டை பெருமாள் கதாபாத்திரத்தில் பொன்னம்பலம் நடித்துள்ளார். சமீபத்தில் பொன்னம்பலம் அளித்த பேட்டியில் கூறியதாவது, தவசி படத்தில் அந்த ஊமை பெண்ணை படாத பாடு படுத்துவேன். புழுவை நசுக்கிற மாதிரி ஒரு கேரக்டர். ரொம்ப முரட்டுத்தனமாய் இருக்கும். நான் தியேட்டர்ல தான் படத்தை பார்த்தேன். அந்த சீனை பாக்கும்போது எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு. ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட்டா அது ஒரு நல்ல படம்.
அந்த படத்தை என் பையன் பொண்ணு எல்லாரும் என்ன ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு வாரமா என்கிட்ட யாருமே பேசல. அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது என் வீட்டில் எல்லாரும் குடும்பத்தோடு போய் படம் பார்த்துட்டு வந்துருக்காங்கன்னு. நானும் என் மனைவியும் சேர்ந்து பார்த்த ஒரே படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் தான். அதுக்கப்புறம் நாங்க சேர்ந்து படம் பார்த்ததே கிடையாது. அவங்க எல்லாரும் தியேட்டர்ல போய் தவசி படத்தை பார்த்துட்டு வந்து என்கிட்ட பேசவே இல்ல என கூறியுள்ளார்