பிரசாந்த் இல்லையாம்… ‘ஜீன்ஸ்’ திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா..? அடடே இப்படியாகிடுச்சே…?

By Begam

Published on:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம்  ‘ஜீன்ஸ்’. இந்தப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாகவும், நடிகர் பிரஷாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை ராதிகா, நாசர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

   

குறிப்பாக இந்த படத்தில் உலக அதிசயங்களை படமாக்கி ரசிகர்களை பிரமிக்க வைத்தார் ஷங்கர். இந்த படத்தை மிகவும் பிரமாண்டமாக அம்ரித்ராஜ், மாற்றம் சுனந்தா முரளி மனோகர் ஆகியயோர் பிரமாண்ட பொறுசெலவில் தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களிலும் சூப்பர் ஹிட் அடித்தது.

தற்பொழுது இத்திரைப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் நடிகர் பிரசாந்தை நடிக்க வைப்பதற்கு முன்னர் நடிகர் அப்பாஸை நடிக்க முயற்சி செய்தாராம் இயக்குனர். அனால் அவரின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.

அப்பாஸிற்கு முன்னரே நடிகர் அஜித்தை அணுகியுள்ளார்.  அவரும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து கொண்டிருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து நடிகர் பிரசாந்த், நடிகை ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் வெளியான ‘ஜீன்ஸ்’ திரைப்படம் 90’ஸ் ரசிகர்களின் மனதில் தற்பொழுது வரை நீங்காத இடத்தை பிடித்துள்ளது.