இவுங்களோட TWIN BABIES இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா..? ப்ரஜின் – சாண்ட்ரா தம்பதியின் லேட்டஸ்ட் பேமிலி போட்டோ…

By Begam

Updated on:

விஜய்  தொலைக்காட்சியில் 2005ல் ஒளிப்பரப்பாகிய ‘இது ஒரு காதல் கதை’ என்ற சீரியலில் நடித்து, டிஸ்யூம் என்ற படத்தின் மூலம் படங்களில் நடிகராக அறிமுகமாகியவர் பிரஜின்.  இதனை தொடர்ந்து ஒருசில சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வந்த பிரஜின் சில ஆண்டுகளுக்கு முன் சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமானார். நடிகை பாவ்னியுடன் நடித்து மக்கள் மத்தியில் 3 ஆண்டுகள் ஆதரவை பெற்று வந்தார்.

   

அதன்பின் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து தோல்வியை சந்தித்தார். படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரஜின் சீரியல் நடிகை சந்திரா எமியை 2008ல் திருமணம் செய்து இரட்டை குழந்தை பெற்றார். சினிமாவில் ஒருசில படங்களிலோ சின்னத்திரை சீரியல்களிலோ நடித்து போதிய வருமானம் இல்லாமலும் வாய்ப்பு கிடைக்காமல் ஒரு சில நடிகர்கள் காணாமல் போவதுண்டு.

அப்படி ஒரு நிலையில் சிக்கினார் நடிகர் பிரஜின் .10 ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன் என்றும் தான் வைத்திருந்த பைக்கை விற்று வீட்டு செலவினை பார்த்து கொண்டதாகவும் கூறி ரசிகர்கர்களை அதிர்ச்சியடைய வைத்தார் பிரஜின். இதைத்தொடர்ந்து  அவர்  டி3 என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் நடிகர் பிரஜின் தனது  மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படமானது தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த  ரசிகர்கள் ‘உங்க TWIN BABIES இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா..?” என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.