Connect with us

கர்ஜணை சிரிப்புக்கு சொந்தக்காரரான PS வீரப்பா.. லட்ச லட்சமா சம்பாதித்த பணத்தை கடைசி காலத்தில் இழந்த சோகம்..

CINEMA

கர்ஜணை சிரிப்புக்கு சொந்தக்காரரான PS வீரப்பா.. லட்ச லட்சமா சம்பாதித்த பணத்தை கடைசி காலத்தில் இழந்த சோகம்..

தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக 50 கள் மற்றும் 60 களில் கோலோச்சியவர் பி எஸ் வீரப்பா. அவரின் கம்பீரமான சிரிப்பே ரசிகர்களைப் பயமுறித்தி அவர் மேல் வெறுப்பை வரவழைக்கும். எம் ஜி ஆர் மற்றும் சிவாஜியின் பல படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த அவரை பொது இடத்தில் மக்கள் பார்த்தால் கூட அவரை கரித்துக் கொட்டுவார்களாம்.

இவரை வில்லனாக பிரபலப்படுத்தியது இரண்டு படங்களில் அவர் பேசிய இரண்டு வசனங்கள். எம்.ஜி.ஆர் சாவித்திரி நடித்த மகாதேவி திரைப்படத்தில் ”மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி” என்று அவர் பேசிய வசனம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

அதேபோல வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா இடையே நடன போட்டி நடக்கும் போது ”சபாஷ் சரியான போட்டி” என்ற வசனமும் வைரலான ஒன்று. இப்படி வில்லனாக மிரட்டிய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் அவர் பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலைக்கு வந்தார்.

   

ஆனால் சம்பாதித்த பணத்தை அவர் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு இழந்துள்ளார். மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போதே அவர் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசனை வைத்து ஆலயமணி மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை தயாரித்தார். இந்த ஆரம்ப கால படங்கள் வெற்றி பெற்றாலும், அவர் அடுத்தடுத்து தயாரித்த படங்கள் எதுவும் வெற்றிப் படமாக அமையவில்லை.

 

அதனால் அவர் தான் சம்பாதித்த லட்சக்கணக்கான சொத்துகளை இழந்துள்ளார். இதனால் கடைசி காலத்தில் அவர் பொருளாதார ரீதியாக நலிவை சந்தித்துள்ளார். மொத்தமாக அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் 21 படங்களையும் தயாரித்துள்ளார். இதையடுத்து அவர் 1998 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

Continue Reading
To Top