விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அறிந்தும் அறியாமலும்’. இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ஆர்யா, பிரகாஷ்ராஜ், நவ் தீப் ,சமிக்சா,கிருஷ்ணா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதில் ஹீரோவாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர். நடிகர் நவ்தீப் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பிறந்தார்.

ஐதராபாத்தயை பூர்விகமாக கொண்டவர். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஜெய்’ என்ற படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகினார்.

அதை தொடர்ந்து இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில் நெஞ்சில் ,அ ஆ ஈ ஈ, ஏகன், சொல்லச் சொல்ல இனிக்கும், இது என்ன மாயம், சீரு , வீரமாதேவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார் . இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘கேகா’ என்ற படத்திற்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக பங்கு பெற்று 4வது இடத்தை பிடித்தார்.

இவர் கேங்ஸ்டார்ஸ்,மாஸ்தியின்,ராகினி எம்எம்எஸ்: ரிட்டர்ன்ஸ் 2வெப் சீரியசில் நடித்துள்ளார். இவர் ஈடிவி யில் வெளியான ‘அருமை’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் .

இதுபோன்று ஏராளமான நிகழ்ச்சிகளை இவர் தொகுத்தும் வழங்கியுள்ளார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.


இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 674 k followers உள்ளனர் தற்போது இவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


