நெப்போலியன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய முன்னணி மற்றும் பிரபல நடிகர் ஆவார். 1990களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் அனைத்திலும் நெப்போலியன் நடித்து இருப்பார். இவரது தோற்றமும் முறுக்கு மீசையும் பிரபலமாக ஆனது.

2000 களின் பிற்பகுதியில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் நெப்போலியன். நெப்போலியன் சுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தனுசுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே Muscular Dystrophy என அரிய வகை நோய் இருந்தது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதிற்கு மேல் நடக்க மாட்டார்கள். வீல்சேரில் தான் வாழ்க்கை அமைந்திருக்கும். 17 வயதிற்கு மேல் உயிரோடவே இருக்க மாட்டார் என மருத்துவர்கள் கூறினார். ஆனால் நெப்போலியன் அவர்களோ போராடி சிகிச்சை கொடுத்து இன்று அளவும் அவரது மகனை நன்றாக வைத்திருக்கிறார். மேலும் தற்போது இவரது மகன் தனுசுக்கும் திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் ஜப்பானில் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.
மகனின் திருமணம் முடிந்தாதால் நெப்போலியன் மிகவும் மன மகிழ்ச்சியில் ஒரு நேர்காணலில் மகனைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய மகனுக்கு இந்த மாதிரி நோய் இருக்கிறது என்று தெரிந்தவுடன் நானும் எனது மனைவியும் அவன் மீது அதிக அக்கறை எடுத்து அவனைப் பார்த்துக் கொண்டோம். இந்தியாவில் மருத்துவர்கள் உங்கள் மகன் நன்றாக இருக்க வேண்டும் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அவரை சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அது தான் இந்த நோய்க்கான மருந்து என்று கூறினார். அதனால்தான் இந்தியாவில் இருக்க வேண்டாம் வெளிநாட்டிற்கு செல்வோம் அங்கு உள்ள சூழல் அவனை நன்றாக வைத்திருக்கும் என்று தான் அமெரிக்கால போய் நாங்க செட்டில் ஆனோம். இதுவரைக்கும் அவனை நாங்க ரொம்ப சந்தோஷமா தான் வச்சிருக்கோம் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் நெப்போலியன்.
