எஜமான் படத்தில் நான் நடிக்கக் கூடாது என நினைத்த ரஜினி… அதுக்குக் காரணம் இதுதான் – நெப்போலியன் பகிர்ந்த தகவல்!

By vinoth on புரட்டாதி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். திமுக பிரமுகர் கே என் நேருவின் நெருங்கிய உறவினரான இவர் பாரதிராஜாவின் அறிமுகத்தால் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த அவருக்கு ரஜினிக்கு வில்லனாக நடித்த ‘எஜமான்’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் ’சீவலப்பேரி பாண்டி’ எனும் படத்தின் கதாநாயகன் ஆனார். அந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து சீவலப்பேரி பாண்டி போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் அவரால் கதாநாயகனாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நிலைக்க முடியவில்லை. பின்னர் மீண்டும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினர்.

   

அதில் கமல்ஹாசனோடு அவர் நடித்த விருமாண்டி மற்றும் தசாவதாரம் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. தன்னுடைய மகனின் உடல்நிலை காரணமாக அவர் இப்போது அமெரிக்காவிலேயே நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார்.

   

இந்நிலையில் அவர் பாரதிராஜா இயக்கத்தில் தான் நடித்த முதல் படமான புது நெல்லு புது நாத்து திரைபப்ட அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.  “நடிகனாக வேண்டும் என பல தடவை பாரதிராஜாவை சந்தித்து கடைசியில் அந்த பட வாய்ப்பை வாங்கினேன்” எனக் கூறியுள்ளார். மேலும் அந்த படத்தில் நடித்த போது அவருக்கு 27 வயதுதான். ஆனால் அவர் அந்த படத்தில் நடித்த கதாபாத்திரத்தின் வயது 60.

 

ஆனால் தன்னுடைய நடிப்பால் அதை ரசிகர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு செய்தார். அந்த படம் ரிலீஸான போது அவருக்கு ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தொடர் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அப்போதுதான் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அவருக்கு எஜமான் பட வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஆனால் அந்த படத்தில் நெப்போலியன் நடிக்க வேண்டாம் என நினைத்தாராம் ரஜினிகாந்த். அது சம்மந்தமாகப் பேசியுள்ள நெப்போலியன் “நான் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்தேன். அதனால் நான் வில்லனாக ரஜினி சாரை விட மூத்த கதாபாத்திரத்தில் நடித்தால் சரியாக இருக்காது என நினைத்தார். ஆனால் படம் ரிலீஸாகி என் நடிப்பைப் பார்த்ததும் அவர் மகிழ்ச்சியடைந்தார்” எனக் கூறியுள்ளார்.