40 நாடுகளைச் சேர்ந்தவர்கள்…! “200 புதுமுகங்களுடன் உருவான மெகா படம்….” அமெரிக்க ஆவி’ ஆடியோ லான்ச்சில் நடிகர் நெப்போலியன் நெகிழ்ச்சி…!!

By Devi Ramu on ஐப்பசி 10, 2026

Spread the love

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் தயாரிப்பில், தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இத்திரைப்படத்தின் இசையை ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக் கொண்டார்.

முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இத்திரைப்படத்தில், அமெரிக்காவில் வாழும் டாக்டர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என 200க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். மேடைப்பேச்சில் நெகிழ்ந்த நெப்போலியன், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் நடித்துள்ளதாகவும், மிகவும் வித்தியாசமான காமெடி ஹாரர் த்ரில்லராகப் படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.