திருநெல்வேலி to அமெரிக்கா.. வீடியோ காலிலே மகனின் நிச்சயதார்த்தத்தை முடித்த நெப்போலியன்..!

By Mahalakshmi on ஜூலை 12, 2024

Spread the love

வீடியோகால் மூலமாக தனது மகனின் நிச்சயதார்த்தத்தை முடித்து இருக்கின்றார் நெப்போலியன்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். வில்லனாக அறிமுகமாகி அதை தொடர்ந்து ஹீரோவாக 70-க்கும் மேற்பட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அரசியல் மீது இருந்த ஆர்வம் காரணமாக தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பணியாற்றினார். பின்னர் ஜேசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது.

   

   

அதில் முதலாவது மகன் தனுசுக்கு தசை சிதைவு நோய் ஏற்பட்டதால் திருநெல்வேலியை அருகே ஒரு கிராமத்தில் வைத்து சிகிச்சை அளித்து வந்தார்கள். பிறகு மகனை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்ற நெப்போலியன். அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் இருந்தாலும் அவபோது சினிமாவில் தலைக்காட்டிக் கொண்டிருக்கும் நெப்போலியன் அமெரிக்காவில் சொந்தமாக ஐடி கம்பெனியையும் விவசாயத்தையும் செய்து வருகின்றார்.

 

மேலும் அவருக்கு அங்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றது. தற்போது தன்னுடைய மகன் தனுஷுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்திருக்கின்றார் நெப்போலியன். சமீபத்தில் கூட அவரின் மகன் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்ற வீடியோவை வெளியிட்டு வந்தார். ஆனால் நிச்சயதார்த்தம் இரண்டு வீட்டார் ஒன்றாக அமர்ந்து நடைபெறவில்லை.

பெண் வீட்டார்கள் மற்றும் நெப்போலியன் குடும்பத்தினர்கள் வீடியோ கால் மூலமாக நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகின்றது. நிச்சயதார்த்தம் என்றால் பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடத்தும் ஒரு நிகழ்ச்சி. ஆனால் தனுசு உடல்நிலை காரணமாக தமிழ்நாடு வர முடியாத சூழல் இருப்பதால் நெப்போலியன் தனது மகனின் நிச்சயதார்த்தத்தை வீடியோ காலிலேயே முடித்துவிட்டார்.

பெண் குடும்பத்தினர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலக்கரைப்பட்டி என்ற ஊரில் வசித்து வருகின்றார்கள். விவேகானந்தர் என்பவரின் மகளை தான் நெப்போலியன் அவரது மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க இருக்கின்றார். வீடியோ காலில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.