அந்த சூப்பர் ஹிட் படத்துல நான் தான் ஹீரோவா நடிச்சிருக்கணும்.. ஆனா.. முதல் முறையாக மனம் திறந்த நடிகர் நந்தா..!

By Nanthini on கார்த்திகை 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகர் தான் நந்தா. சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படத்திலிருந்து நாம் நந்தாவை பார்த்து வருகிறோம். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சூர்யா உடன் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அந்தத் திரைப்படத்தில் அவர் நடித்த கண்ணன் கதாபாத்திரத்திற்கு தற்போது வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நந்தா படத்திற்கு பிறகு பல படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்தார். இவர் நாயகனாக நடித்த சில திரைப்படங்கள் மக்களை கவர்ந்தது அதில் ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு நந்தா மக்களால் வெகுவாக கவனிக்கப்பட்ட படம் என்றால் ஈரம் திரைப்படத்தை சொல்லலாம்.

அதர்வாவுக்கு வில்லனாகும் நடிகர் நந்தா!

   

இது திரைப்படத்தில் முதல்முறையாக யாரும் எதிர்பாராத அளவில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அந்தப் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியதால் பல விருதுகளையும் அந்த சமயத்தில் நந்தா பெற்றார். பிறகு மணிரத்தினம் தயாரிப்பில் தனசேகரன் இயக்கிய வெளிவந்த வானம் கொட்டட்டும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நந்தா நடித்திருந்தார். பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தை யாரும் எதிர்பாராத அளவில் சிறப்பாக நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் மிஸ் பண்ண படம் குறித்து மனம் திறந்து உள்ளார்.

   

நந்தா (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா

 

அதில், கடந்த 2005 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ராம். இந்த திரைப்படத்தில் ஜீவா ஒரு மனநோயாளியாக நடித்திருந்த நிலையில் அவருடைய அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க நான் தான் கமிட் ஆகி இருந்தேன். அமீர் சார் என்கிட்ட கதைய சொல்லி எல்லாம் ஓகே பண்ணிட்டாரு. பிறகு இந்த படத்துக்காக நிறைய முடி வளர்க்க வேண்டும் என்று சொன்னாங்க.

Kollywood moms | Hindi Movie News - Times of India

அதுக்கு கிட்டத்தட்ட அஞ்சு மாசம் ஆகும். அதுக்கப்புறம் படம் எடுக்க எப்படி நாளும் ஐந்து மாதம் ஆகிவிடும். எப்படியோ இந்த ஒரு படத்தை முடிக்க ஒரு வருடம் ஆகிவிடும். அந்த சமயத்தில் நான் மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்தேன். ராம் படத்தில் நடித்தால் அந்த மூன்று பட வாய்ப்புகளும் என்னை விட்டு போய்விடும் என்பதால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறினேன். நான் சொன்னதை அமீர் புரிஞ்சுகிட்டார். பிறகுதான் ஜீவா கிட்ட கதை சொல்லி ஓகே பண்ணி அந்த படத்துல நடிக்க வச்சாரு என்று நந்தா பேசியுள்ளார்.