அவங்கள அக்காவா பார்க்கல நடிகையா தான் பார்த்தேன்.. எல்லாம் தலைகீழா மாறிடுச்சு.. ஓப்பனாக பேசிய நடிகர் நகுல்..!!

By Priya Ram on ஜூலை 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தேவயானி. இவரது தம்பி நகுல் பாய்ஸ் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான வாஸ்கோடகாமா படத்தில் நகுல் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் தான் வாஸ்கோடகாமா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

   

அதில் கலந்து கொண்ட தேவயானி தனது தம்பி குறித்து உருக்கமாக பேசியிருந்தார். நகுல் அவரது தன்னம்பிக்கை மற்றும் அழகான திறமையை வெளிக்காட்டுவதற்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நேரம் வரும்போது நினைத்த மாதிரி நடக்கும் என தேவயானி பேசினார். இந்த நிலையில் நகுல் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது நகுல் கூறியதாவது, வாஸ்கோடகாமா படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் பங்கேற்க நான் ஏற்கனவே அக்காவை அழைத்திருந்தேன். ஆனால் அவங்க சூட்டிங் இருக்கிறதால வர முடியாதுன்னு சொன்னாங்க. ஆனா எப்படியோ தெரியல ஷூட்டிங் போஸ்ட் பாண்ட் ஆயிடுச்சு.

   

 

முந்தைய நாள் எனக்கு போன் பண்ணி நான் வரேன்னு சொல்லிட்டாங்க. அவங்க வருவேன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு. சின்ன வயசுல இருந்து நான் அவங்களை அக்காவை பார்க்கவில்லை. ஒரு நடிகையாக தான் பார்த்திருக்கேன். அக்கா நடிக்கும் போது நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். அவங்க அவ்வளவு ஹார்ட் வொர்க் பண்ணுவாங்க. அக்கா சொன்ன மாதிரி அவங்களுக்கும் எனக்கும் அக்கா தம்பி அப்படிங்கிற பாண்டிங் அந்த அளவுக்கு இருந்தது கிடையாது. நான் சின்ன பையனா இருக்கும்போதே அவங்க நடிகை ஆயிட்டாங்க.

என் அம்மா அப்பா என்கிட்ட சொல்லுவாங்க. அக்கா சூட்டிங் ஸ்பாட்டில் வேற மாதிரி இருப்பாங்க. அதுவரைக்கும் நல்ல ஜாலியா பேசிட்டு இருப்பாங்க. ஷாட் ரெடி ஆயிடுச்சின்னா உடனே நடிக்கிறதுக்கு கிளம்பிடுவாங்க. அக்கா நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னாடி வரைக்கும் நான் நிறைய பேசணும்னு ஆசைப்பட்டு நிறைய ரெடி பண்ணி வச்சிருந்தேன். ஆனா அவங்க பேசுன அதுக்கப்புறம் எல்லாமே தலைகீழா மாறி போயிடுச்சு. அக்கா வந்தது எனக்கு ரொம்ப பெரிய விஷயம். இதனை வருஷமா சினிமா இண்டஸ்ட்ரில இருக்கேன். நான் ஒரு நடிகரா என்னோட திறமையை வெளிக்காட்டணும். தேவயானி அக்காவோட பேர காப்பாத்தணும் நெனச்சிருக்கேன் என ஓப்பனாக பேசியுள்ளார்.