நடிகர் நாகேஷ், தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜியை போல மற்றும் ஒரு தன்னிகரில்லாத கலைஞன். நடிகர் கமல்ஹாசன் இப்போதும் தனது நடிப்பு குரு என குறிப்பிடும் நடிகர்கள் இருவர். ஒருவர் சிவாஜி கணேசன், மற்றொருவர் நாகேஷ்தான். அந்த அளவுக்கு தமிழ் திரையுலகில் மிக முக்கியமானவராக மறைந்த பின்பும் இன்றும் இருக்கிறார். அப்படிப்பட்ட நாகேஷ் வாழ்வில் நடந்த மிக துயரமான ஒரு சம்பவம் இதுதான்.
நாகேஷின் மனைவி ரெஜினாவுக்கு, செல்வராஜ் என்ற தம்பி உண்டு. பயங்கர குடிகாரராகிய இவர், எப்போதும் குடித்துவிட்டு வந்து அக்காவிடம் பிரச்னைகள் செய்வது வழக்கம். மனைனவியின் தம்பி, தனது மச்சினன் என்ற முறையில் நிறைய பணம் கொடுத்து, தேவையான வசதிகள் செய்து கொடுத்து நல்ல முறையில் அவரை நாகேஷ் வைத்திருந்தும், அவர் குடித்துவிட்டுச் செய்யும் பிரச்னைகள் தீரவே இல்லை. அவரால் பயங்கர மன உளைச்சலில், நிம்மதியின்றி தவித்திருக்கிறார் நாகேஷ். அவனுக்கு எதுவுமே செய்யாதீங்க என, மனைவி ரெஜினா சொன்னதையும் மீறி நிறைய பணம் கொடுத்திருக்கிறார் நாகேஷ்.
இந்நிலையில், தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங்கில் சிவாஜி, பாலையா, ஆகியோருடன், வைத்தி கேரக்டரில் நாகேஷ் நடித்துக்கொண்டிருந்த போது, படத்தின் இயக்குநர் ஏபி நாகராஜனுக்கு போன் வந்திருக்கிறது. அதில், குடிபோதையில் தகராறு செய்த தனது தம்பியை, நாகேஷின் மனைவி ரெஜினா கொலை செய்துவிட்டதாகவும், அவரை போலீசார் கைது செய்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை தயங்கியபடியே நாகேஷிடம் சொன்ன போது சுதாரித்துக்கொண்ட நாகேஷ், இப்போது தொழிலை பார்க்கலாம். தொழில்தான் முக்கியம்.
இந்த காட்சியை முடித்துவிட்டு நான் போகிறேன்,’ அந்த காட்சியை நடித்து முடித்து விட்டுதான் சென்றிருக்கிறார். சிறையில் இருந்த அவரது மனைவியை நாகேஷ் சந்தித்த போது, சினிமாவில் நடித்து, எல்லோரையும் சிரிக்க வைக்கும் உங்களை நிம்மதியாக, சந்தோஷமாக வாழ அவன் விடவில்லை. உங்கள் வேதனையை தீர்க்கவே அவனை கொன்றேன், என அவரது மனைவி, நாகேஷூக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.இதை மறைந்த நடிகர் மனோபாலா, ஒரு நேர்காணலில் கூறி நாகேஷ் போன்ற உன்னத கலைஞன் யாருமில்லை என நெகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே டெல்டா எல்லையில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான சாலை விபத்து, பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.…
சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்ந்த ராணுவ வாகன நிகாம் லிமிடெட் (AVNL) நிறுவனத்தில்…
ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில், தெருநாய் ஒன்றை ஒரு கும்பல் கற்கள் மற்றும் மரக் குச்சிகளால் அடித்துக் கொன்ற கொடூரமான…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…
'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களைக் கண்டறிய, எலுமிச்சைத் துண்டைப் பயன்படுத்தும்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…