Categories: சினிமா

நடிப்பு, பாட்டு எனக் கலக்கிய டி எஸ் ராகவேந்திரா… இளையராஜாவோடு சேர்ந்து இசையமைத்திருக்கிறாரா?

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் டி எஸ் ராகவேந்திரா. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ரேவதியின் தந்தையாக தன்னுடைய மகள் விதவையாகிவிட்டதை நினைத்து புலம்பும் தந்தையாக நடித்திருப்பார். அந்த படத்தில் இடம்பெற்ற அழகு மலராட பாடலில் அவர் ஜதி சொல்லும் காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். அந்த பாடலை அவரும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தில் அவர் கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வெற்றியை அடுத்து தொடர்ந்து அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. குறிப்பாக பாலச்சந்தரின் ’சிந்து பைரவி’திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருப்பார்.. இதனைத் தொடர்ந்து அவர் ’விக்ரம்’ திரைப்படத்தில் சற்று வில்லத்தனமான கேரக்டரில் நடித்திருப்பார்.

அதன் பின்னர் ‘சின்னதம்பி பெரிய தம்பி’ ’அண்ணா நகர் முதல் தெரு’ ’சொல்ல துடிக்குது மனசு’ ’வாய் கொழுப்பு’ ’கற்பூர முல்லை’  ’வாழ்க ஜனநாயகம்’ ’ஹரிச்சந்திரா’ ’நீ வருவாய் என’ ’இளையவன்’ ’காதலன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2000களுக்குப் பிறகு அவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

குணச்சித்திர நடிகரான ராகவேந்திரா நடிப்பு மட்டும் இல்லாமல் இசை பாட்டு என பல்துறை வித்திகராக இருந்துள்ளார்.  1979 ஆம் ஆண்டு வெளியான நினைவில் ஒரு மலர்’ என்ற திரைப்படத்தில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை அடுத்து அவர் ’யாகசாலை’ ’தேன் சிட்டுகள்’ ’படிக்காத பாடம்’ என சில படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

1972 ஆம் ஆண்டே இவரும் இளையராஜாவும் சேர்ந்து உயிர் என்ற படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றனர். ஆனால் அந்த படம் ரிலீஸாகவில்லை என்பது பலரும் அறியாத தகவல். விஜய் ரமணி என்ற இயற்பெயருடைய ராகவேந்திரா சுலோச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியும் ஒரு சிறந்த பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

3 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

3 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

3 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

3 மணத்தியாலங்கள் ago