முரளியை தவிர வேறு யாரும் இத சொல்ல மாட்டாங்க… சேது படத்துக்காக அவர் எடுத்த முடிவு… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

By vinoth on ஜூலை 1, 2024

Spread the love

பிரபல நடிகரான முரளி பெங்களூரைச் சேர்ந்தவர். 99 படங்களில் முரளி கதாநாயகனாக நடித்துள்ளார். முதல் முதலில் பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பகல் நிலவு திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைத் தந்தது. அதன் பிறகு முரளி நடித்த புது வசந்தம், இதயம் கடல் பூக்கள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

கடல் பூக்கள் திரைப்படத்தில் நடித்ததற்காக முரளிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. முரளி முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, கார்த்திக், பார்த்திபன், சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகைகளான மீனா, ரோஜா, சிம்ரன், தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.

   

தற்போது முரளியின் வாரிசுகளான அதர்வா மற்றும் ஆகாஷ் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் முரளி அதிகமாக நடித்தது தமிழ் படங்களில்தான். அவரைக் கதாநாயகனாக ஏற்றுக் கொண்டதும் தமிழ்நாட்டு மக்கள்தான். முரளி தான் கதாநாயகனாக நடித்த போது பெரும்பாலும் கல்லூரி மாணவர் வேடத்தில்தான் நடித்தார். அது அவர் மேல் ஒரு விமர்சனமாகவே இப்போது வரை வைக்கப்பட்டு வருகிறது.

   

பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முதலில் முரளிதான் ஒப்பந்தம் ஆனாராம். அப்போது அவர் பிஸியான நடிகராக இருந்தும் அந்த படத்துக்காக மொட்டை அடிக்க துணிச்சலாக சம்மதித்தாராம்.

 

தான் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு அந்த படத்துக்கு வருகிறேன் என்று சொன்னாராம். ஆனால் சேது படம் தாமதம் ஆகிக்கொண்டே சென்றதால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதன் பின்னர்தான் விக்ரம் வந்து அகிலன் என்ற டைட்டில் சேது என்று மாற்றப்பட்டதாம்.