இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார். மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது. மேலும் ஏகே 64 படத்தில் நடிகை ஸ்ரீலீலா நாயகியாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சிலர் முன்னணி பிரபலங்கள் நடிப்பது உறுதியாகி உள்ளது. மலையாள நடிகர் மோகன்லால் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமாரும் ஏகே 64 படத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் மோகன்லால், பிரபு கமல்ஹாசன் ரஜினிகாந்த் விஜய் உள்ளிட்டோருடன் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
